SRCW மாணவர் மன்றத் துவக்கவிழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 29-ஆம் ஆண்டு மாணவர் மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி ஸ்வாதி ரோகித் மற்றும் சிறப்பு விருந்தினர் ராபர்ட் போஷ்ச், கோயம்புத்தூரின் மனிதவள மேம்பாட்டு  உயர் அதிகாரி நர்மதா ரமேஷ் ஆகியோர் முதன்மை வகித்தனர்.

விழாவின் தொடக்கமாக விளக்கேற்றி தொடங்கி வைத்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நர்மதா ரமேஷ். மேடையில் இருந்த விருந்தினர்களை பூங்கொத்து கொடுத்து கல்லூரி மாணவர்கள் வரவேற்றனர். விழாவில் கல்லூரியின் முதல்வர்  சித்ரா அவர்கள்  அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். தனதுஉரையில் தலைமைத்துவத்துடன் கனிவான அணுகுமுறையும் இளைய தலைமுறையினர் வாழ்வில் முக்கியமானது என்றார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி ஸ்வாதி ரோகித் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். அவர் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வாழ்வில் தொடர்ந்து கற்றுக் கொண்டு கடமையாற்ற வேண்டும். அடிப்படையாக மனபலமும், உடல் பலமும் பெற தினம் அரை மணிநேரம் பயிற்சி செய்யுங்கள், இது அந்த நாளை சிறப்பாக மாற்றும் என்றும் கூறினார். ராபர்ட் போஷ்ச், கோயம்புத்தூரின் மனிதவள மேம்பாட்டு  உயர் அதிகாரி நர்மதா ரமேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசும்போது பெண்கள் எங்கும் எதற்காகவும் விட்டுக்கொடுத்தல் கூடாது என்றும் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள விடாமுயற்சியோடு உழைக்க வேண்டும். மாணவியர் தங்கள் ஆற்றல்களைச் சுருக்கிக் கொண்டு சிறிய வட்டத்துக்குள் சிறைப்படாமல் வெளியுலகை எதிர்கொள்ளும் ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறிய அவர் தற்காலத்தில் பணித்தேவைகளுக்கேற்ப மாணவியர்கள் தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். அதன் பின் அவர் மாணவர்களிடம் கேள்வி கேட்க சொல்லி அதற்கு சரியான, தெளிவான பதிலும் அளித்தார்.

ஆன்லைன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்று உறுதிமொழி ஏற்றனர். மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.