நாளை முதல் 7 நாட்களுக்கு உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படடுள்ளது

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. பி.எஸ்.ஜி நர்சிங் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து 27 ஆவது உலக தாய்ப்பால் வாரத்தை ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள் “பெற்றோருக்கு ஆற்றல் அளிப்போம், தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்போம்”. ஒரு குழு முயற்சியாக இருப்பதால் தாய்ப்பாலூட்டலை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் கணவன்மார்கள், குடும்பங்கள் ,பணியிடங்கள் மற்றும் சமூகமும் முக்கிய பொறுப்பு வகிக்கிறது.  இக்கருப்பொருளை வலியுறுத்தி தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பல நிகழ்ச்சிகளின் மூலம் பெற்றோருக்கும் சமுதாயத்திற்கும் தெரிவிக்க உள்ளார்கள்.

ஒரு எழுச்சி நிகழ்வாக தாய்பால் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காக ஒரு போஸ்டர் கண்காட்சி பூ.சா.கோ மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் ஹரிணி, யோகா மற்றும் இயற்கை  மருத்துவத்துறை, பூ.சா.கோ மருத்துவமனை மற்றும் பூ.சா.கோ நர்சிங் கல்லூரியின் முதல்வர் ஜெயசுதா அவர்கள் இணைந்து பர்சனீவ் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் தாய்மார்களுடன் ஆத்மார்த்தமாக கலந்துரையாட உள்ளனர். மேலும் தாய்ப்பாலூட்டுதல் பற்றிய பொது மக்களின் கருத்தை வீடியோ பதிவு செய்ய ஃபான் மால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எங்கள் ரேடியோ அதிர்வெண் பி.எஸ்.ஜி எப்.எம் 107.8 மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோத்தே ஹரிப்பிரியா, பேரன்டிங் நிபுணர் அவர்களுடன் பிரசவித்த தாய்மார்களின் கணவர் மற்றும் உறவினர்கள் தாய்ப்பாலூட்டுதல் மேம்படுத்த எவ்வாறு உதவிக்கரம் நீட்ட வேண்டும்  என்ற உணர்வுப் பூர்வமான கலந்துரையாடல் பூ.சா.கோ மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தாய்ப்பாலூட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நினைவின் ஆழத்தில் உள்ள ஞானத்தை தட்டி எழுப்ப வினாடி வினா நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.