உனக்கு தெரிந்த மொழிகளில் நான் உன்னுடம் பேசுவேன்

‘ஹோலோபோர்டேஷன் டிரான்ஸ்லேட்டர்’ இன்றைய மனிதர்களின் அடுத்த கட்ட அறிவியல் ரீதியான பரிணாம வளர்ச்சி.

ஹோலோபோர்டேஷன் இதனை சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், எந்திரன் படத்திலுள்ள ஒரு காட்சியை உதாரணாமாக கூறலாம். மேடையில் ரஜினியின் ஒளி உருவம் தோன்றி கேள்விகளுக்குப் பதிலளிக்குமல்லவா? அது தான்  ஹோலோபோர்டேஷன் தொழில்நுட்பத்தின் காட்சியமைப்பு. நமது உருவத்தை எங்கிருந்தும், எங்கே வேண்டுமானாலும் தோன்றச் செய்வது தான் இதன் அடிப்படை.

இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாகியுள்ளது. இந்த  ஹோலோபோர்டேஷன் எந்திரன் படத்தில் வருவத்தை விட இதன் தரத்தை அதிகப்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களை இணைத்து வியக்க வைத்திருக்கிறது இந்த நிறுவனம்.

இதன் சிறப்பு, நினைத்த இடத்தில் உருவத்தை தோன்றச் செய்வது மட்டுமல்லாமல், இடத்துக்குத் ஏற்றபடி  மொழியைப் பேசச்செய்வது தான்.

ஆங்கிலத்தில் ஆற்றுகின்ற உரையை எப்படி ஹோலோகிராம் உருவம் ஒன்று அப்படியே ஜப்பானிய மொழியில் பேசும் என்பதை செயல்படுத்திக் காட்டினார் மைக்ரோசாப்டின் அஸூர் பிரிவு துணைத்தலைவர் ஜூலியா வயிட்.

‘ஹோலே லென்ஸ் 2’ எனப்படும் ஹெட்செட்டை மாட்டியபடி, தனது உருவத்தையே மேடையில் ஹோலோகிராமாக தோன்றச் செய்து, அதை ஜப்பானிய மொழி பேச வைத்து கூட்டத்தை வியக்க வைத்தார் அவர்.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் எனப்படும் செயற்கை அறிவு எந்திரங்கள் வெகு வேகமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு உதாரணம் இந்த ‘ஹோலோபோர்டேஷன் டிரான்ஸ்லேட்டர்’. அதுமட்டுமல்லாமல் நாம் டைப் செய்வதை வாசித்துக் காட்டும் (டெக்ஸ்ட் டு ஸ்பீச் ) தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அஸூர் கொண்டு வந்த தயாரிப்பான ‘அஸூர் டிரான்ஸ்லேட்’ தான் இதன் இன்னொரு முக்கியமான நுட்பம். இது கிளவுட் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மொழி மாற்று மென்பொருளாகும். எந்த மொழியில் பேசுகிறோம், எந்த மொழிக்கு உரை மாற்றப்பட வேண்டும் என்பதைச் சொல்லி விட்டால் மென்பொருளே நமது மொழியை மாற்றித் தரும். இந்தத் தொழில்நுட்பம் தான் ஆங்கிலத்தை ஜப்பானிய மொழியாக மாற்றியதன் பின்னணியில் இயங்கும் மென்பொருள்.

குறிப்பிடவேண்டிய வியப்பூட்டும் அம்சம் என்ன வென்றால் ‘நியூரல் டெக்ஸ் டு ஸ்பீச்’ தொழில்நுட்பம் தான். இது தான் வெறுமனே உயிரற்ற வகையில் மொழி மாற்றம் செய்யாமல், நாம் எப்படிப் பேசுவோமோ அதே குரலில், அதே உச்சரிப்பில், அதே அழுத்தத்தில் உரையை மாற்றுகிறது. சொல்லப்போனால் நாமே முன்னின்று பேசுவது போன்ற ஒரு அக்மார்க் உணர்வைத் தருவது இது தான். இப்போதைக்கு நாற்பத்தைந்து மொழிகளில் பேசுவதற்கான கட்டமைப்பை நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

ஹோலோகிராம் உருவத்தை அச்சு அசலாக கொண்டு வருவதற்கு விர்ச்சுவல் ரியாலிட்டியைப் போல ‘மிக்சட் ரியாலிடி’ பயன்படுத்தப்பட்டுள்ளது. எதார்த்தமான உருவ வடிவமைப்பை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘மிக்சட் ரியாலிடி கேப்சர் ஸ்டூடியோஸ்’ செய்கிறது.

இது எதிர்காலத்தில் நம் அனைவரும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு ஆசிரியர் பல மாணவர்களுக்கு பாடங்களை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அவரால் பாடம் நடத்த முடியும். அதுவும் அவர்களுடன் நேரடியாக உரையாவுடவது போல.