டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை கவுரவப்படுத்தி டூடுள் வெளியிடு

தமிழகத்தில் பிறந்து, சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்க இருந்த பெற்றோரை சமாதானப்படுத்தி மன்னர் கல்லூரியில் சேர்ந்து படித்து முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனார்.

பெண் கல்விக்காக போராடிய அவர் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்குக் எதிராக குரல் கொடுத்தார். மேயர், சட்டசபைத் துணைத் தலைவர் போன்ற பதவி வகித்த முத்துலட்சுமி ரெட்டி குறைந்த பட்ச திருமண வயது நிர்ணயம், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமணத் தடை சட்டம் போன்றவற்றுக்காக போராடியுள்ளார்.

சென்னை அடையாறில்  முதல் புற்றுநோய் மையத்தை தொடங்கினார். பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்கு வகித்த அவருக்கு,  அவரது சித்திரத்தை கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் வெளியிட்டு கவுரப்படுத்தியுள்ளது.