போர், கலவரங்களில் 12,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ. நா. அறிக்கை

வரலாறு எழுதப்பட்ட காலகட்டத்தில் இருந்து இன்று வரை போர் என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தகால கட்ட போரில் சண்டையிடும் வீரர்கள் தான் கொல்லப்படுவார்கள். அனால் தற்பொழுது பொதுமக்களும் குழந்தைகளும் கொள்ளப்படுகிறன்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் ஆளும் அரசுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக போர் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த  நாடுகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற போர் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த  ஆண்டு போர் உள்ளிட்ட உள்நாட்டுக் கலவரங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன், பாலஸ்தீனம், சிரியா ஆகிய நாடுகளில் 12,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.