இரண்டாம் இடம் பிடித்த பெர்னார்ட் அர்னால்ட்

உலகில் நீண்ட நாட்களாக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் பில்கேட்ஸ். ஆனால் இவரது இடத்தை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் பிடித்துக்கொண்டார். அதனால்  பில்கேட்ஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டர். இந்நிலையில்  புளூம்பெர்க் நிறுவனம் இந்த ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியல் வெளியிட்டது. இதில் பில்கேட்ஸ் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அப்படி என்றால் இரண்டாம் இடம் யாருக்கு?.

தற்போதும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2-ம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளனர்.

பிரான்ஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்விஎம்ஹெச் நிறுவனத்தின் தலைவர் தான் பெர்னார்ட் அர்னால்ட். முன்னணி பேஷன் நிறுவனங்களில் ஒன்றான லூயிஸ் வாய்ட்டன் நிறுவனம் இவருடையதுதான். இவரது சொத்து மதிப்பு தற்போது 104.2 பில்லியன் டாலராக உள்ளது. பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதைச் சுட்டிக்காட்டியுள்ள புளூம்பர்க், பில்கேட்ஸ் அவ்வாறு செய்யாமல் இருந்தால் அவரே தொடர்ந்து முன்னணியில் இருப்பார் எனக் கூறியுள்ளது.