பிரிக்கால் நிறுவனத்திற்கும் அதன் தொழிலாளர்களுக்கும் இடையே  ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது

..டி.யு.சி. மாநில செயலாளர் ஆறுமுகம் தகவல்.  

கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கம் சார்பில் ஏ.ஐ. டி.யு.சி மாநில செயலாளர் ஆறுமுகம் கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவை பிரிக்கால் நிறுவனத்தில் இந்த மாதம் முதல் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கம் புதிதாக பொறுப்பேற்றது. இச்சங்கத்தில் சுமார் 684 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு வரும் 5 ஆண்டுகளில் ரூ.5400 வரை, ஆண்டுதோறும் ஆயிரம் வீதம் படிப்படியாக ஊதிய உயர்வு செய்து தரப்பட உள்ளது. மேலும் பஞ்சப்படியாக புள்ளி ஒன்றுக்கு ரூ.80 விதமா கணக்கு போடபட்டு  மாதம் தோறும் 1200/-  வழங்கப்பட உள்ளது. தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கின் போது தற்போது வழங்கிவரும்  ரூ.5000யை  ரூ.7,000மாக உயர்த்தி வழங்கவும்,  தொழிலாளர்கள்  மற்றும் அவர்கள் குடும்பத்தில்  அனைவரும் பயன் பெற மருத்துவ காப்பீடு  செலவு தொகையை ரூ. ஒரு லட்சதில்  50 ஆயிரத்திலிருந்து  வழங்கப்பட உள்ளது. மேலும் அவசரகால மருத்துவ செலவுகளுக்கு 75 ஆயிரம் ருபாய் வழங்கப்படவுள்ளது. பணி மூப்பு பெரும் தொழிலாளர்களுக்கு  பணிக்கொடையாக வருடத்திற்கு 15 நாட்கள் என்பதற்கு பதிலாக வருடத்திற்கு 27.5 நாட்களாக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடினமான வணிக சூழலில் நிறுவனமும் முன்னேற்ற பாதையில் செல்ல தொழிலாளர்களுடனான உறவை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என தொழிற்சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

பேட்டியின்போது கோவை மாவட்ட பிரிக்கால் நல சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.