வெள்ளி குவளையில் டீயின் விலை 13,800

ஒரு டீயின் விலை 13,800 ரூபாய் என்றவுடன் அனைவரும் அதிர்ச்சி அடையலாம். ஆனால் இது உண்மை.

தி ரூபென்ஸ் என்ற ஹோட்டல் இங்கிலாந்து பக்கிங்கம் அரண்மனைக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் தான் இந்த டீ விற்கப்படுகிறது. இந்த நாட்டிலேயே இங்கேதான் இந்த காஸ்லியான டீ விற்கப்படுகிறது. இங்கு ஒரு கப் டீயின் விலை 200 டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.13,800.

இந்த டீக்கு ஏன் இவ்வளவு மவுசு என்றால், இலங்கையிலிருந்து பிரத்யேகமாக தேயிலை இலைகளை கொண்டு, வெல்வெட் துணியினால் உலர்த்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பக்கிங்கம் அரண்மனையின் அழகை ரசித்து கொண்டு டீ அருந்துவது இதன் தனிச்சிறப்பு. வெள்ளி குவளையில் மட்டுமே டீ வழங்கப்படுகிறது. இதற்காகவே, பலர் பணத்தை செலவிட்டு, பலர் இங்கு டீ அருந்தி வருகின்றனர்.