உடையை விட உணவு முக்கியம் வாழ்வதற்கு

பிஷப் அப்பாசாமி கல்லூரியில் கேட்டரிங் துறையின் துவங்க விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் கல்லூரியின் கேட்டரிங் துறையின் இணை பேராசிரியர் செபாஸ்டின் சால்வின், கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்சென்ட், துறைத்தலைவர் எட்சன் நிர்மல் தலைமை ஆகியோர் வகித்தனர்.

விழாவின் தொடக்கத்தில் துணை பேராசிரியர் ஜோஸ்வா சார்லஸ் வரவேப்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்சென்ட் சிறப்புரை வழங்கினார். இதனை தொடர்ந்து துறை தலைவர் எட்சன் நிர்மல் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினரை துணை பேராசிரியர் சுரேஷ் குமார் அறிமுகம் செய்தார்.

சிறப்பு விருந்தினர் செபாஸ்டின் சால்வின் பேசுகையில், உன் திறமை என்பது தனித்துவமானது.உன்னி நீயே குறைத்து எடைபோட்டு கொள்ளாதே, ஏன் என்றால், இந்த உலகத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யாரும் கிடையாது.பைபிள் புத்தகத்தில் கடவுளின் மூலம் நடத்தப்பட்ட முதல் அதிசியம் தண்ணீரை திராச்சை ரசமாக மாற்றியது தான். அதானல் மக்களை உணவால் மட்டுமே திருப்தி படுத்த முடியும். உடை இல்லமால் கூட ஒருவனால் வாழமுடியும், ஆனால் உணவு இல்லமால் வாழமுடியாது.

உங்கள் ஆசிரியர்கள் ஒரே நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து தான் ஆகவேண்டும். இதில் நீங்கள் உங்கள் பாதையில் முன்னேற விடமுயற்சி வேண்டும். என்று தனது உரையை முடித்து கொண்டார்.

இதன் பின்னர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உறுதிமொழியுடன் பதிவி ஏற்றுக்கொண்டனர். விழாவின் இறுதியில் துறையின் துணை பேராசிரியர் அமல் வர்கிஹ் நன்றியுரை வழங்கினார்.