சர்க்கரை நோய்க்குத் தீர்வு வெற்றிலை !

மருத்துவ இலைகளில் ஒன்று வெற்றிலை. இது மலேசியாவில் தோன்றியது என்பர். இதை இந்தியா மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரின் அளவு 44.

வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) எனும் பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்தலாம்.

நமது உடலில் சுரக்கும் 24 விதமான ‘ அமினோ அமிலங்கள் ‘ வெற்றிலையில் உள்ளன. இது ஜீரணத்திர்க்கு உதவும்.

மருத்துவ பயன்கள் :

வெற்றிலையின் இலைகளும் வேர்களும் மருத்துவ குணம் பெற்றவை.

  1. வேரின் எண்ணெய், மூச்சுக்குழல் மற்றும் பெண்களின் மலட்டுத்தன்மை நோய்களுக்கு மருந்தாகிறது.
  2. இலையின் சாறு ஜீரணத்துக்கு சிறந்தது.
  3. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க வைத்து, உடலில் சொரி, சிரங்கு, படை உள்ள இடங்களில் தடவினால் விரைவில் சரியாகிவிடும்.
  4. வெற்றிலையை கசக்கி, சிறிது கற்பூரத்தை சேர்த்து குழப்பி தலைவலி உள்ள இடத்தில் தேய்த்தால் உடனே குணமாகும்.
  5. தேள் விஷத்தை முறியடிக்க 2 வெற்றிலையுடன் 9 மிளகை மடித்து வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். தேங்காய் துண்டையும் சாப்பிட வேண்டும்.
  6. சர்க்கரை நோய் உள்ளவர்கள், 2 வெற்றிலையுடன் ஒரு கைப்பிடியளவு வேப்பிலை, அருகம்புல்லை 500 மிலி தண்ணீரை 150 மிலி தண்ணீராக கொதிக்கவிட்டு தினமும் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
  7. அல்சர் உள்ளவர்கள் 2 வெற்றிலையுடன், அத்தி இலை 1 கைப்பிடியளவு, வேப்பிலை 5 சேர்த்து கசாயம் வைத்து மூன்று வேலை குடிப்பது நல்லது.
  8. முற்றின வெற்றிலை சாற்றுடன் சுக்கு, மிளகு சேர்த்து தேனில் கலந்து குடிப்பதால் மூச்சு திணறல் குணமாகும்.
  9. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம் மெல்லும்போது உமிழ்நீர் சுரப்பியினை தூண்டுவதுடன், உற்சாக உணர்வை தருகிறது.
  10. வெற்றிலைக்கு பால் உணர்வு மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி உள்ளது.
  11. இதய நோய், அதிகப்படியான கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் வல்லமை கொண்டது வெற்றிலை.