சிப்பியில் பூத்த முத்து

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் பிறந்த இவர் தமிழ்நாட்டின் தமிழ் மகனாக வலம் வர காரணம் இவரின் நாவில் இருந்து உதிக்கும் பிழையில்லாத தமிழ் வார்த்தைகள் தான்.

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் இதுவரை வரை 5800 கும் மேல் பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

அதுமட்டும் அல்லாமல் இவரது கவிதைகள் புது கவிதையின் ஒரு புது நாடி என்று கூட சொல்லலாம். கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலக போர், கருவாச்சி காவியம், தமிழுக்கு நிறம் உண்டு, தண்ணீர் தேசம் போன்ற புத்தகங்கள் இவரது சிறந்த படைப்புகளால் ஒன்று, மற்றும் கவியரங்கில் கவியரசு, இது போதும் எனக்கு, நண்பா உனக்கொரு வெண்பா, சிறுமியும் தேவதையும், மெளனத்தில் புதைந்த கவிதைகள், சிரிப்பு, மௌன பூகம்பம், விதைச்சோளம் போன்ற பல கவிதை தொகுப்புகள் படைத்தவர் இவர்.

இத்தகைய பெருமை மிக்க கவிஞன் தான் வைரமுத்து.

இவர் இது மட்டும் இல்லாமல் தன்னை பற்றிய வரலாற்றையும் “இதுவரை நான்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இவர் கவிதை தொகுப்பு, கட்டுரை, ஒலி நாடகம், நாவல் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

இத்தகைய புகழ் பெற்ற சிப்பியில் பூத்த முத்துக்கு இன்று (13.7.2019)பிறந்தநாள்.