ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் 29 – ஆவது பட்டமளிப்பு விழா

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 29-ஆவது பட்டமளிப்பு விழா இன்று எஸ்.என்.ஆர். கலையரங்கில் இவ்விழாவில், கல்லூரியின் துணை முதல்வர், S.தீனா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மலேசியா, ஆசியா பசுபிக் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ரான் எட்வர்ஸ்  அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார். தனது சிறப்புரையில், பட்டதாரிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய திறனுடனும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய  திறமையுடனும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், தனது உரையில் ‘பட்டதாரிகள் தங்களுடைய அனுபவத்தைப் பெறவும், தனித் திறன்கள் மற்றும் தொழில்முறைத் திறனை வளர்ப்பது சரியான துறையில் அனுபவத்தைப் பெறத் தயார்படுத்துகிறது என்றும், இந்த குறிக்கோளை எட்டுவதற்கான வாய்ப்பை உருவாக்கிய முந்தைய தலைமுறையினருக்கு நன்றி தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அடுத்த தலைமுறைக்கு அவர்களின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார். இறுதியாக பட்டதாரிகள் எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துரை வழங்கினார்.

எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் D.லஷ்மிநாராயணசாமி அவர்கள், பட்டம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார், ஆண்டறிக்கையினை கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் கு.கருணாகரன் அவர்கள் வழங்கினார். இவ்விழாவில் 433 இளநிலை பட்டதாரிகளும் 126 முதுநிலை பட்டதாரிகளும் பட்டங்கள் பெற்றனர்.