இவரா இதற்கெல்லாம் காரணம்?

அன்று முதல் இன்று வரை. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை. அதாவது பிளாக் அண்ட் வைட் காலம் வரை அனைவரும் போட்டோக்களின் பிரியர்கள் என்றே கூறலாம். நம் தாத்தா, பாட்டி போட்டோக்கள் பெரும்பாலும் பிளாக் அண்ட் வைட் கலரில் தான் இருக்கும். தற்போது தொழிற்நுட்ப வளச்சியால் டிஜிட்டல் போட்டோஸ், மொபைல் செல்ஃபி என எடுத்து கொள்கின்றனர். கேமராக்களுக்கும் கண்கள் உள்ளன எனவும் கூறுவார்கள். இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் தான். திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு இவரையே சாரும். இன்று இவரின் 165வது பிறந்த தினம்.

‘ஈஸ்ட்மன் கோடாக்’ ஒளிப்படச்சுருள் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். ஜார்க் ஈஸ்ட்மன், ஃபிலிம் மூலம் புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். அதுவரை, காகித படச்சுருளில்தான் பயன்பாட்டில் இருந்தது. சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் புகைப்படக்கலையை கொண்டுவந்தார்.

1914, அக்டோபர் 28ம் தேதி வண்ணப்புகைப் படத்திற்கான செயல்முறையை கண்டுபிடித்ததை அறிவித்தார். இதன் பின், ஒட்டுமொத்த கலையுகமே மிகப்பெரிய மாற்றத்தை அடைந்தது. இது ஒரு புரட்சியே செய்தது.

1932, மார்ச் 14ல் ” என் வேலை முடிந்தது, எதற்கு காத்திருக்க வேண்டும்? ( My Work is done. why wait ? ) ” என எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். 1954ல் இவரின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை அமெரிக்க அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*