மரத்திற்கு மாற்று அறுவை சிகிச்சை

மதுரையில் நான்கு வழி சாலை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 11 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு கிரேன் உதவியுடன் வேறொரு இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டது.

மனிதனுக்கு எப்படி இதய மாற்று அறுவைசிகிச்சை நடைபெறுகிறதோ அதே போல்.

மதுரை – நத்தம் சாலையில் 1020 கோடி செலவில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுவருகிறது. அதற்காக ஏற்கனவே 500 மரங்களுக்கு மேல் வெட்டப்பட்டுவிட்டது. இந்நிகழ்வு மதுரை சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் இதனை எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினார்கள். அதனால் தற்பொழுது மரங்கள் வேரோடு பிடுங்கி  மாற்று இடங்களில் நடப்பட்டு வருகிறது.

இந்த மேம்பாலம் மேம்பாலம் 1020 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது.

மதுரை – நத்தம் சாலை மேம்பாலம் மதுரை மாநகராட்சி வளாகத்தில் 10 அடி தூரம் உள்ளே வந்து செல்கிறது. அதனால், மாநகராட்சி நிர்வாகம், பாலத்திற்கு இந்த பகுதியில் உள்ள நிலத்தை நெடுஞ்சாலைத்துறை வழங்கியது.

ஆனால், இப்பகுதியில் 11 பழமையான மரங்கள் இருந்தன. இந்த மரங்களை அகற்றினால் மட்டுமே அப்பகுதியில் பறக்கும் பாலம் அமைக்க முடியும் என்பதால் மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையாளர் விசாகன், அகற்றப்படும் மரங்களை வேரோடு பிடுங்கி மாநகராட்சியின் மற்ற பகுதியில் பாதுகாப்பாக நடுவதற்கு நெடுஞ்சாலைத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் அண்மையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், மாநகராட்சி வளாகத்தில் பறக்கும் பாலத்திற்காக விட்டுக்கொடுக்கும் இடத்தில் இருந்த 11 மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் வெற்றிகரமாக நட்டுவைத்தனர். இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பார்வையிட்டார்.

அவர் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் மாற்று இதயம், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை பொருத்தி மரண தருவாயில் உள்ளவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம். தற்போது அதுபோல, மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடுவது மூலம் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்படுகின்றன.

அதன் அடிப்படையிலே, மதுரை-நத்தம் பறக்கும் சாலை திட்டத்திற்காக அகற்றப்பட இருந்த 8 வேப்பமரங்கள், 3 உதிய மரங்களை வேரோடு பிடுங்கி கிரேன் மூலம் அப்படியே அருகில் உள்ள மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்பாகநடப்பட்டன. இந்த மரங்கள் 20 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் பழமையானவை, ’’ என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*