உலகின் மிகச்சிறிய கேமரா அறிமுகம்!

உலகின் மிகச்சிறிய கேமராவை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சோனி நிறுவனம். ஜூலை 15ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் RX0 II கேமராவின் விலை 57,990 ரூபாய்.

கையடக்க அளவில் கேமராக்களை வெளியிட்டு வரும் சோனி நிறுவனம் தற்போது உலகின் மிகச்சிறிய RX0 II கேமராவை வெளியிட்டுள்ளது. 59மிமி X 40.5 மிமி X 35மிமி அளவிலான இந்த கேமராவின் மொத்த எடை 132 கிராம். மிகச்சிறந்த தொழில்நுட்பத்தில் உலக தரத்தில் RX0 II இருக்கும் என்கிறது சோனி.

180 டிகிரி ஸ்கிரீன், வாட்டர்ப்ரூஃப், ஷாக்ப்ரூஃப் மற்றும் க்ரஷ்ப்ரூஃப் அம்சங்களைக் கொண்டுள்ளது.15.3 மெகாபிக்சல் Exmor RS CMOS பொருத்தப்பட்டுள்ளது. போட்டோக்களுக்கு சிறப்பான நிறம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*