“ஹார்ட் குவேக்” புத்தக வெளியீட்டு விழா

கோவை ப்ரூக்பில்ட் வளாகத்தில் உள்ள ஒடிசி புத்தக மையத்தில் கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையரும், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனருமான கார்த்திகேயன் எழுதிய “ஹார்ட் குவேக்” என்ற புத்தகம் வெளியீட்டு விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐ. ஏ.எஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன், சொக்கா பவுண்டேஷன் சொர்ணலதா, வணிக வளாகத்தின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ த்ரில்லர் கதை பின்னணியை கொண்டு உருவாகியுள்ள இப்புத்தகத்தை கார்த்திகேயன் வெளியிட காயத்ரி கிருஷ்ணன் மற்றும் தனியார் வணிக வளாகத்தின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் ஆகியோர் பெற்றுகொண்டனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேயன்,

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகத்தில் எளிமையான எழுத்து  நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், திறமையான எழுத்தாளர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் நல்ல களம் அமைத்து கொடுக்கப்படுகிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மறுசுழற்சி செய்யக்கூடிய கைப்பை அறிமுகம் செய்யப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*