இலவச கண் சிகிச்சை முகாம்

கோவை சி.ஆர்.ஐ. அறநிலை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாமை கீரணத்தம் ஊராய்ச்சி ஒன்றியத்தின் முன்னாள் தலைவர்  பி.சுகுமார்  துவக்கிவைத்தார் . உடன் ச.இராஜா, மேலாளார் இ சி.ஆர்.ஐ. பம்புகள், மு.முத்துராம  நிர்வாக அலுவலர்  (ஓய்வு) சி.ஆர்.ஐ. அறநிலை ஆகியோர்  உள்ளனர்.

கோயம்புத்தூர், கீரணத்தம் கிராமத்தில் அமைந்துள்ள சி.ஆர்.ஐ. அறநிலை, பொது மக்களின் நலன் கருதி ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் கல்வி நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பொது மக்களின் தேவைக்கான அத்தியாவசியக் கட்டமைப்புகளை நிறுவ நிதியுதவி வழங்குதல் போன்ற மற்றும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மேலும், கீரணத்தம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு கீரணத்தம் கிராமத்தில் ஓர பல்நோக்கு மருத்துவமனை அமைத்திடத் திட்டமிட்டு, அது தொடர்பான பணிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக சி.ஆர்.ஐ. அறநிலை, கோவை சங்கரா கண் மருத்துவ மையத்துடன் இணைந்து கீரணத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களின் ஏழை எளிய மக்களின் நலன் கருதி இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

இந்த முகாமில் கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம், கொண்டையம்பாளையம், வரதயங்கார்பாளையம், குரும்பாளையம், கோவில் பாளையம், கோட்டைப்பாளையம், அக்ரஹார சாமக்குளம், அத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம், இடிகரை, வட்டமலைப் பாளையம், சின்னவேடம்பட்டி, சின்னமேட்டுப் பாளையம், சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையும், கண் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. கண் மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் 26 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக கீரணத்தம் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்  திரு.சுகுமார், சி.ஆர்.ஐ. அறநிலையின் மருத்துவ மையத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து இலவச கண் மருத்துவ முகாமினைத் துவக்கிவைத்தனர்.