BAC- யில் மேலாண்மை துறை மன்றத்தின் துவக்க விழா

பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரியில், மேலாண்மை துறையின் சார்பாக 2019 – 2020 ம் ஆண்டிற்கான மேலாண்மை துறை மன்றத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் ஹரிதாஸ் கலந்துகொண்டார், மற்றும் பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரியின் செயலர் ஜெரோன், முதல்வர் பீட்டர் ராஜ், துறை தலைவர் ஆனந்த் ஜெரால்டு மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

பிரார்த்தனை பாடலுடன் தொங்கிய விழாவில் கல்லூரின் மூன்றாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவன் இன்பான்ட் கிஷோர் வரவேற்புரை வழங்கினார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை மூன்றாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவி ரேவதி வாசித்தார்.

விழாவில் கல்லூரி செயலர் ஜெரோன் தலைமையுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் பீட்டர் ராஜ் வாழ்த்துரை வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்புவிருந்தினரை அறிமுகப்படுத்தினார் துறை தலைவர் ஆனந்த் ஜெரால்டு.

சிறப்பு விருந்தினர் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் ஹரிதாஸ், கார்பரேட் நிறுவனம் மாணவர்களிடம் அதாவது கார்பரேட் நிறுவனதில் பணிபுரிபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

விழாவின் இருதியில் இரண்டம் ஆண்டு மேலாண்மை துறை மாணவன் கோகுல் கிருஷ்ணன் நன்றியரை  வழங்கினார்.