இரைச்சலைத் தவிர்க்கும் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

இரைச்சலைத் தவிர்க்கும் வகையில், சோனி நிறுவனம் புதிய வயர்லெஸ் இயர்போன் அறிமுகப்படுத்தியுள்ளது.

WF – 1000XM3, இதுபோன்ற எண் கொண்ட இயர்போன்கள் முற்றிலும் வயர்கள் அற்றவை. இது சுற்றுச்சூழலிலுள்ள இரைச்சலை நீக்கி தெளிவான சவுண்டைக் கொடுக்கும் தன்மையுடையது என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரத்திற்கு தொடர்ந்து இயக்க முடியும் என்றும், அதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் கொண்டு 3 முறை சார்ஜ் செய்தால் இடைவிடாது 24 மணிநேரமும் இயர்போனை இயக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. இரைச்சலை குறைக்கும் வசதியை நிறுத்திவிட்டால் 32 மணிநேரம் வரை இயங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய மதிப்பில் 15,600 ரூபாய் கொண்ட இந்த சாதனம் இந்திய சந்தைக்கு வரும் தேதியை இது வரை அறிவிக்கப்படவில்லை.