இரைப்பையை பாதிக்கும் உப்பு ! – ஆய்வின் முடிவுகள்

இரைப்பை என்பது பசியைத் தூண்டி, உண்ட உணவு செரிமானித்து உடலுக்குத் தேவையான சத்துக்களை பிரித்து அனுப்பும் வேலையை செய்கிறது.

உணவில் அதிக உப்பு ( சோடியம் குளோரைடு ) சேர்த்துக் கொண்டால் இரைப்பை குடலின் வீக்கம் ( Gastrointestinal Bloating ) உண்டாகிறது.  இதனால் செரிமானம் பாதிக்கப்படும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Johns Hopkins Bloomberg School of Publice Health ஆய்வாளர்கள் ஏற்கனவே 1998 – 99 ல் செய்திருந்த ஆராய்ச்சியை மீண்டும் உறுதி செய்யும் விதத்தில் இந்த ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

இரைப்பை குழாயில் வீக்கம் என்பது அதிகரித்து வரும் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர்க்க சிறந்த வழி உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதுதான். அதுமட்டுமல்லாமல், நார்ச்சத்தை அதிகமாக உட்கொள்வதால் இரைப்பையின் வேலை எளிதாகும் என்று நோயல் மியூயெல்லர்  தெரிவித்தார். இவர் தான் இந்த ஆராய்ச்சியின் மூத்த தலைவர் ஆவார்.

இரைப்பை குழாய் வீங்கி வயிறு உப்புசமாக இருக்கும்போது, அதிகப்படியான வாயு வெளியேறுகிறது. இது நார்ச்சத்தில் உள்ள சத்துக்களை அழித்துவிடும். நார்ச்சத்து உடலுக்கு சரிவர கிடைக்கவில்லை என்றால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வரும்.

எனவே, இரைப்பை குழாயின் வீக்கத்தைத் தூண்டும் மூல காரணமான உப்பு (சோடியம் குளோரைடு) அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.