அணையை உடைத்த நண்டுகள் !

அண்மையில் மஹாராஷ்டிராவில் பெய்த கனமழையால் சிறிது நாட்களுக்கு முன்பு திவாரி என்ற அணை  உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அம்மாநில அமைச்சர் அளித்த பதில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இருந்துள்ளது.

இதற்கு அணையில் அதிகமாக நண்டுகள் இருந்ததே இந்த உடைப்புக்கு காரணம் என்றும், அணை உடைப்புக்கு முந்தைய நாளில் மட்டும், கனமழையால் அணையின் நீர் மட்டம் 8 மீட்டருக்கு உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.

ஆம், அந்த அணை உடைவதற்கு நண்டுகள் இருந்தது தான் காரணம் என்று கூறியது, மிகவும் வியக்கத்தக்க பதிலாக இருக்கிறது. நண்டுகள் எப்படி இந்த அணை உடைய காரணமாக இருந்திருக்கும். நண்டுகளுக்கு அவ்வளவு பலம் இருக்கிறதா என்று அனைவரும் யோசிக்கும் அளவிற்கு இவர் கூறிய பதில் இருக்கிறது.

உண்மையில் நண்டுகளுக்கு அவ்வளவு பலம் இருக்குதா என்று தெரியவில்லை.