உடல் முதிர்ச்சியை தாமதமாக்கும் சோயா !

சோயா பீன்ஸில் அதிகளவில் புரோட்டீன், மிதமான அளவு கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன.

சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சோயா உட்கொள்ளும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் என்னும் LDL அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கலாம்.

தினசரி சோயா உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்றுநோய்களை கட்டுப்படுத்தலாம். முக்கியமாக நாள்பட்ட பல நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சோயா பெரும் பங்கு வகிக்கிறது.

சோயா, மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற்படும் சங்கடங்களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது. சோயா உடல் முதிர்ச்சியை தாமதமாக்குகிறது.

இவ்வுணவு கற்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்றது. சோயாவில் உள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் வைட்டமின் – ஏ சத்து சருமத்தை மென்மையாக்குகிறது. மாலைக்கண் நோயை தடுக்கிறது.

குழந்தைகளுக்குத் தினமும் சோயாவை உணவில் சேர்த்து தரும்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிறந்த முன்னேற்றமடையும். குழந்தைகளுக்கு மாற்று உணவாக சோயா தொடர்ந்து தருவதால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுதலுடன் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் உயரும்.

சோயாவில் கால்சியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இருப்பதால், பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

சோயா, யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுவலியை குறைக்கும். சிறுநீரகக் கோளாறிலிருந்து பாதுகாக்கிறது. அனைத்து பருப்புகளிலுள்ள புரத சத்தைவிட மும்மடங்கு சோயா வடகத்தில் உள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான ஊட்டச்சத்து உணவு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*