செவியை பாதிக்கும் ஹேண்ட் ட்ரையர் !

உலகளவில் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் பல கண்டுபிடிப்புகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன. மனிதனின் உடல் உழைப்பை குறைக்கும் நோக்கில் மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின், ஃபிரிஜ் என மக்களின் ஈர்ப்பை பெற்றுள்ளது. தற்போது கைகளை காயவைக்கும் ( ஹேண்ட் ட்ரையர் ) மெஷின் கழிவறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இது அலுவலகம், திரையரங்குகள், மால்கள் என பல்வேறு இடங்களில் உபயோகத்தில் உள்ளது.

ஹேண்ட் ட்ரையர் பயன்படுத்துவதால், அதிலிருந்து வரும் உஷ்ணமான காற்றுடன் வரக்கூடிய சத்தம் காது கேளாமைக்கு வழிவகுக்கிறது. இது குழந்தைகளை முக்கியமாக தாக்கக்கூடியது.

மேலும், ஹேண்ட் ட்ரையர்களில் இருந்து வெளியாகும் சத்தத்தின் டெசிபல்கள் அடிப்படையில், காதில் காயம், வலி, கேட்கும் திறனை இழத்தல் என பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என  கனடாவை சேர்ந்த சிறுமியின் ஆராய்ச்சியில் வெளியிட்டுள்ளார். இவருக்கு தற்போது 13 வயதாகிறது. இந்த சிறுமியின் ஆய்வு, கனடா குழந்தைகள் நல நிபுணர்கள் சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.