பெங்காலி நம் பங்காளி

இந்தியா மற்றும்  வங்கதேசம் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ளும் முனைப்புடன் இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது . அதே நேரத்தில் இந்தியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது வங்கதேசம்.

இருபினும் இந்த இரு அணிகளையும் இணைக்கும் ஒரு ஒற்றை புள்ளியில் இருக்கிறார் ‘ரவீந்தர் நாத் தாகூர்’. காரணம் இரு நாட்டு தேசிய கீதமும் எழுதியவர் ரவீந்தர் நாத் தாகூர். இவர் ஆசியாவின் முதல் நோபல் பெற்ற கவிஞர் என்ற பெருமையையும் ரவீந்திரநாத் தாகூர் பெற்றுள்ளார்.

இரண்டு அணிகளும் வெவ்வேறு அணிகளாக இருந்தாலும் போட்டி ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் இவர்களை ஒன்றிணைத்து விட்டது .

சுதந்திரத்திற்க்கு பின் பிரிந்து போன வங்கதேசம் என்றும் நம் சகோதர நாடு தான்.