இவர்கள் தான் கோவையை ஆண்டவர்கள் !

அழகான கொங்குத்தமிழ், மரியாதை தெரிந்த மக்கள், இதமான காற்று, பருத்தி விளையும் பூமி, இயற்கை போற்றும் அழகை கொண்ட ஊர் நம் கோயம்புத்தூர். கோவை, கொங்குமண்டலம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பல்வேறு பெயர்களை கொண்ட ஊராகும். கோயம்புத்தூர் மக்களை பார்ப்பவர்கள் சிலர், ” கோயம்புத்தூர் காரங்க குசும்பு காரங்க ” என கோயம்புத்தூரை அடையாளபடுத்துவர்.

இந்த கோயம்புத்தூர் எப்படி உருவானது :

நவம்பர் 24, கோயம்புத்தூரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இது எப்படி தோன்றியது என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக மக்கள் தொகை கொண்ட ஊர் தான் கோயம்புத்தூர். இந்த ஊர்க்கு கொங்குநாடு, கோணியம்மன்புத்தூர் என்று சில பெயர்களும் உள்ளன. இந்த பெயர் வர காரணம் கோனியம்மன் கோவில் தான்.

  1. சேர அரசர்கள் ஆண்டுவந்த இந்த ஊர் சோழ மன்னர்களிடம் கை மாறியது.
  2. மைசூரை ஆண்ட கங்க மன்னர்களிடமிருந்து பாண்டிய அரசர்களிடம் மாறியது.
  3. 9ம் நூற்றாண்டில் மறுபடியும் சோழமன்னர்கள் ஆட்சி பிடித்ததால் இந்த ஊரை அழகாக மாற்றினர்.
  4. இருளர் சமுதாயத்தை சேர்ந்த தலைவன் பெயர் கோவன். இவரின் பெயரிலேயே இந்த ஊருக்கு கோவன் புதூர் என பெயர் வந்தது. பிறகு நாளடைவில் கோயம்புத்தூராக மாறியது.
  5. 1291ல் கர்நாடகாவின் சாளுக்கிய மன்னர்களால் ஆட்சி மாற்றம் வந்தது.
  6. 14ம் நூற்றாண்டில் மதுரையை சேர்ந்த முஸ்லீம் மன்னர், பாண்டியர்கள், விஜயநகரத்து அரசர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள் ஆட்சி செய்தனர்.
  7. பிறகு கோயம்புத்தூர், மைசூர் ஆட்சிக்கு கீழ் வந்தது. 1760ல் மைசூர் ஆட்சியை ஹைதர் அலி கைப்பற்றினார்.அப்போது தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போர் நடந்தது. கடைசியில் திப்புசுல்தானை கொன்று, ஆங்கிலேயர்கள் கோவையை சென்னை மாகாணத்தோடு சேர்த்தனர்.
  8. 1804ம் ஆண்டு கோயம்புத்தூரை தலைநகரமாக அமைத்தார்கள். பிறகு, 1848ம் ஆண்டு சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் கோயம்புத்தூரில் முதல் நகராட்சி தலைவராக பதவி ஏற்றார்.
  9. 1876 லிருந்து 1878 வரை கோவையில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. 1900ல் பெரிய பூகம்பம் வந்து பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 1928 ல் பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்ததால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கு பின், கோவை பல முன்னேற்றங்களை கண்டுள்ளது.
  10. 1981ல் சிங்காநல்லூர் நகராட்சி, கோயமுத்தூர் நகராட்சியுடன் சேர்க்கப்பட்டு கோவை மாநகராட்சியாக மாறியது. இது தான் கோவையின் வரலாறு.