இரவு நேரத்தில் டிவி வெளிச்சத்தில் தூங்குபவரா ஜாக்கிரதை!

இரவில் லைட் வெளிச்சத்தில் தூங்கினால் வெயிட் போடுமாம். ஆதாரத்துடன் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் செயற்கை வெளிச்சத்தில் உறங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், பெண்களின் உடல் நலம், மார்பக புற்றுநோய் மற்றும் பல நோய்கள், சுமார் 43,722 பெண்களிடம் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு நடத்தபட்ட பெண்களிடம், நீங்கள் இரவில் எப்படி தூங்குவீர்கள்?, அதாவது விளக்கு வெளிச்சத்தில் தூங்குபவரா?, சிறிய அளவிலான விளக்கு, டிவி,  வெளிச்சத்தில் தூங்குபவரா? அல்லது வெளிச்சம் ஏதுமின்றி உறங்குபவர்களா ? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பெண்கள் பலர், செயற்கை வெளிச்சம் மற்றும் டிவி வெளிச்சத்தில் தூங்குபவர்களாக உள்ளனர். இவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருந்தது.

அதாவது, செயற்கை வெளிச்சத்தில் வெளியாகும் மெலாடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால் தூக்கம் குறைந்து உடலில் உள்ள கொழுப்பு அதிகரிக்கிறது என ஆய்வு முடிவில் தெரிவிக்கின்றன.

எனவே, செயற்கை வெளிச்சத்தில் தூங்குவதை தவிர்ப்பது நல்லது.