ரசிகர் ராணுவம் கொண்ட ரசிகர்

என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு …. என்று ஆரம்பித்தாலே போதும் இவருக்கென்று ஆழ்கடல் நீர் போல் அமைதியாய் இருந்தவர்கள் எல்லாம் சுனாமி அலை போல்  ஆர்ப்பரித்து அதில் இருந்து வரும் சபதம் அண்ணா என்று தான் ஒலிக்கும். காரணம் இவரை தனது  வீட்டில் ஒருவராக தான் இவரை கொண்டாடுகிறார்கள்.

பல முறை அடிவாங்கிய பாறை தான் மணலாய் மாறுகிறது. அதைபோல் தான் இவரும் தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் விழுந்த கற்கள் இவர் மீது இன்றும் நிற்காமல் விழுந்துகொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் அடி விழுந்த கற்கள் தற்பொழுது இவரின் அடியில், காலடியில் தான் இருக்கிறது. இதை வைத்து இவர் தனது திறமையாலும் முயற்சியாலும் கட்டிய கோட்டை தான் இன்று தமிழகத்தின் அடையாளமாய் ரசிகர்களின் முகமாய் இருக்கிறது.

தளபதி என்ற ஒற்றை வார்த்தையே தமிழகத்தை ஆட வைத்துவிடுகிறது.குழந்தை நட்சதிரமாய் திரையின் ஓரமாய் மின்ன ஆரம்பித்த இவர், இன்று இவர் பெயர் எழுதிய பலகை கூட தனித்து நிற்கிறது.இதையும் தாண்டி இவர் குடும்பத்தின் மீது அதீத காதல் கொண்டவர், அதே போல் தன்னை ரசிக்கும் ரசிகனை ரசிக்கும் ரசிகர் இவர்.

தமிழகத்தை தாண்டி கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் ராணுவம் கொண்ட ரசிகர் இவர்.இவருக்கு இளைங்கர்கள் மற்றும் இல்லாமல் அனைத்து விதமான வயதினரும் இவரை ரசிப்பவர்களாக இருக்கிறார்கள். இதுவே இவரின் வெற்றி நிலைத்து இருக்க காரணம்.

இன்று இவர் பிறந்தநாளை கொண்டாட இவரது தம்பிமார்கள் ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டனர். விண்வெளிக்கு செல்லும் விண்கலனுக்கு தான் கவ்ண்ட்டவுன் வைப்பார்கள், ஆனால் ஏற்கனவே திரை விண்ணில் மின்னும் நட்சத்திரத்திற்கும் கவ்ண்ட்டவுன் வைத்து கொண்டாடுகின்றார்கள். தங்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன்.

நேற்று வெளியான பிகில் திரைப்படத்தின் முதல் பார்வை சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் விரும்பப்பட்டு வருகிறது.