சப்ஜாவின் மருத்துவ குணங்கள் !

சப்ஜா விதை ஒரு மூலிகைச் செடியாகும். இதற்கு திருநீற்றுப்பச்சை, கரந்தை அல்லது பச்சிலை (Basil : தாவரவியல் பெயர் : Ocimum basilicum ) என பெயர் உள்ளது. திருநீற்றுப்பச்சை எனும் செடியின் விதைகள் சப்ஜா விதைகள் என அழைக்கப்படும். இந்த விதை குளிர்பானங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இது எள் மற்றும் கருஞ்சீரக வடிவில் இருக்கும். இந்த விதையை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இதை 15 நிமிடம் நீரில் ஊறவைப்பதால், நீரை உறிஞ்சி வலுவலுப்பு தன்மையடைகிறது. சர்பத் மற்றும் பலூடாவிலும் இது சேர்க்கப்படுகிறது.

சப்ஜா விதையின் மருத்துவ குணங்கள் :

  1. பித்தத்தை நீக்கும், உடல் சூட்டை குறைக்கும்.
  2. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடியது.
  3. உடல் பருமனைக் குறைக்க சிறந்த பொருள்
  4. ஜீரண பாதையில் உள்ள புண்களை ஆற்றக்கூடியது.
  5. நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலை போக்கும்
  6. கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு சிறந்தது.
  7. சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், எரிச்சல் மற்றும் வெள்ளைபடுதலுக்கும் சிறந்த மருந்து.
  8. இதில் துத்தநாகம், சல்பர், ஆன்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் ஏ,பி,சி உள்ளிட்ட அனைத்து சத்துக்கள் உள்ளன.
  9. அதிகளவு இரும்புச் சத்து உள்ளதால் இரத்தசோகை வராமல் காக்கும்.
  10. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

 எப்படி சாப்பிடலாம் :

சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து, பின் உங்களுக்குப் பிடித்த மில்க் ஷேக், ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், பால் போன்றவற்றுடன் கலந்து குடிக்கலாம். சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.