வாங்குகிறோம்…கொடுக்கிறோமா?

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியும், இயற்கை அழிவுகளும் மேலும்மேலும்அதிகரித்து வருகின்றன. இயற்கையையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க தமிழக அரசும், மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. அதே சமயம் இதற்கான பொறுப்பு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நிச்சயம் உள்ளது.

இந்நிலையில் இயற்கை பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி. பாடத்திட்டத்தோடு, இயற்கை வளங்களைப்பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும்செயல் வடிவத்திட்டங்களையும் தீட்டி வருகிறது. இது பற்றிய தகவல்களை சற்று விரிவாகக்காண்போம். இன்னிலையில், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி இயற்கை வளங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) வி.பாலசுப்ரமணியம் கூறுகையில்: ‘நான் இக்கல்லூரியில் 1979ம் ஆண்டு இளம் அறிவியல், தாவரவியல் பட்ட வகுப்பில் சேர்ந்தேன். அதன் பின்பு முதுநிலை அறிவியல், எம்.பில் மற்றும் பி.எச்டி ஆராய்ச்சி படிப்புகளை இக்கல்லூரியில் முடித்து இதே கல்லூரியில் தாவரவியல் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். இன்று கல்லூரி முதல்வர் என்ற பதவி வரை உயர்ந்துள்ளேன். பொதுவாக ஒரு மாணவர் தொடர்ந்து ஒரே கல்லூரியில் பட்டபடிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை முடித்து அதே கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார் என்றால் அதற்கு முக்கியமான 3 காரணங்கள் உண்டு.

முதலாவதாக, தலைசிறந்தநிர்வாகம். அடுத்ததுமிகச்சிறந்தகல்விசூழல், மூன்றாவதாகநல்லஇயற்கைசூழல். கொங்குநாடுகலைஅறிவியல்கல்லூரிஇந்ததகுதிகள்அனைத்தையும்கொண்டுள்ளது. தற்போது உள்ளகாலச்சூழ்நிலையில் அழிந்துவரும் இயற்கைவளங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இக்கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்பெருமக்களும் ழுவதும் உணர்ந்துள்ளனர். எனவே இதனை சரிசெய்ய சுற்றுசூழல் அமைப்பு (ECO CLUB) என்ற அமைப்பின் மூலம் இயற்கை வளங்களைபற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஏற்படுத்தி வருகிறோம். இயற்கைவளங்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்க வேண்டிய அவசியம் குறித்து இக்கல்லூரி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலைகளில் சுமார் 1500 வகையான தாவரங்கள் இருப்பதுடன்அரிய விலங்கினங்களும் வாழ்ந்து வருகின்றன. காடுகளில் வளங்கள் அழியாமல் இருக்க வேண்டுமாயின், அவற்றின் அருகில் உள்ள நிலப்பரப்புகளை பசுமையாக்கி நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டியது அவசியமாகும். இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்தும், பொதுமக்களிடத்தும் சரியான முறையில் ஏற்படுத்துவதே இந்த சுற்றுசூழல் அமைப்பின் (ECO CLUB) நோக்கமாகும்’ என்றார்.

சுற்றுச்சூழல் அமைப்பு (இகோ கிளப்) ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செ.ராஜா கூறுகையில்,

‘நம்நாட்டில் முன்பு இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தன. வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்பவும், அவர்களின் தேவையைப்பூர்த்தி செய்யவும்இயற்கை வளங்கள்அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன்வளங்கள் மாசும் அடைகின்றன. இதனால் இன்று இயற்கை வளங்கள் பேரளவில் அழிந்து வருகின்றன. இதனால் பருவநிலை மாற்றங்களும்அதிகரித்துள்ளன. இந்த நிலை தொடர்ந்தால்மனித இனம் அழிவதற்கான வாய்ப்புகளும் நிறைய உள்ளன. எனவே இதனை முன்னுணர்ந்து கொங்குநாடு கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பு ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை வடிவமைப்பது மட்டுமல்லாமல் செயல்படுத்தியும் வருகிறது.

இயற்கை வளங்களால் நாம் வாழ்கிறோம். ஆனால் அந்த வளங்களைப்பாதுகாக்கிறோமா? என்பது இங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள தாவரங்கள், விலங்குகளை பற்றி நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இதற்கான ஆய்வுகளை வெவ்வேறு நாடுகளிலிருந்தும், மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிடுகின்றனர். ஆனால் அதனைப்பாதுகாக்கும் செயல் வடிவங்களை நாம் முறையாக செயல்படுத்துவது இல்லை. எனவே சரியான வழிமுறைகளுடன் இயற்கை வளங்களைப்பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இக்கல்லூரியின் செயலர் டாக்டர் வாசுகி, ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஊக்குவித்து வருகிறார்.

விலங்கியல், முதுநிலை அறிவியல் பட்டதாரியான கல்லூரி செயலரின்  வழிகாட்டுதலின்பேரில், சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, கடந்த ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழ்த்துறை உதவி பேராசிரியை டி.பிரியா வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும் 2000 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மரக் கன்றுகளை, புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அந்த மரக்கன்றுகளை வளர்ப்பதற்கான செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் மக்களின் பங்களிப்புடன் இயற்கைச்சூழலை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அதில் குறிப்பிடப்பட்ட திட்டங்கள் விபரம்:

1.வனம் மற்றும் வன உயிரினங்களைப்பாதுகாத்தல்

2.நீர் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்

  1. மாசு கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

4.ஈர நிலம், வறண்ட நிலங்களை மேம்படுத்துதல்

5.ஆதிவாசியினப்பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்

6.மாநகராட்சியுடன் இணைந்து திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்.

7.இயற்கை விவசாய முறையை மேம்படுத்துதல்

8.பிளாஸ்டிக் உபயோகத்திற்கு பதிலாக மாற்று வழி கண்டறிதல்

9.சுற்றுச்சூழல் தூய்மை இந்தியா திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்

10.வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து இயற்கை சுற்றுலா திட்ட அறிமுகம்.

11.ஏரி, குளங்களில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் அழிவதற்கான காரணங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள்.

12.பறவைகள் பற்றிய ஆய்வில்மாணவர்களை ஈடுபடுத்துதல்.

13.கல்லூரி வளாகத்தில் காகிதப்பயன்பாட்டை குறைப்பதற்காக, டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள்.

அத்துடன்,அமெரிக்கநாட்டின்வியாமிங்பல்கலைக்கழகமும்கொங்குநாடுகலைஅறிவியல்கல்லூரில்இணைந்துமனித, விலங்குமோதல்களைப்பற்றிஆய்வுகளைநடத்திவருகிறது. ஆதிவாசியினபழங்குடிமக்களின்வாழ்வாதாரத்தைமேம்படுத்தவண்ணமீன்வளர்ப்பு, காளான்வளர்ப்பு முறைகளில் அம்மக்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. நவீன இயற்கை விவசாய மேலாண்மையை (aquaphonic) பற்றி ஆய்வு நடத்தபட்டுவருகிறது. தன்னார்வநிறுவனங்களுடன் இணைந்து இயற்கை வளங்களைப்பாதுகாப்பதற்கான கருத்தரங்கம், விழிப்புணர்வு மற்றும் செயல் முறை விளக்கங்களையும் மக்களுக்கு இக்கல்விநிறுவனம் வழங்கிவருகிறது.

மேலும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து பருவநிலை மாற்றத்தைத்தடுப்பதற்கான விழிப்புணர்வுக்கூட்டங்களையும் இக்கல்லூரி நடத்தி வருகிறது. பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருவதுடன் வன உயிரினங்களைக் கணக்கிடும் பணியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எங்கள் கல்லூரியில் உள்ள மரங்களில் 24 வகைகளுக்கு மேலான பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றைப்பாதுகாப்பதற்காக அந்த மரக்கிளைகளில் கூடுகளை அமைத்து பராமரித்து வருகிறோம். கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களின் நீராதாரத்திற்கு சொட்டுநீர் மேலாண்மை பாசன முறையை செயல்படுத்தி வருகிறோம். மேலும் மண்புழு உரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகள் செய்து வருகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

– மேகலா நடராஜ்.