யோகாசனத்தின் மகிமைகள் !

5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் யோகா கலை பின்பற்றப்படுகிறது என்பதற்கு ஹரப்பா போன்ற இடங்களில் உள்ள கற்சிலைகள் சான்றாக காணப்படுகிறது. இந்தியாவில் பதஞ்சலி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. யோகா என்ற சொல் சமஸ்கிருதம் என்ற சொல்லில் இருந்து தோன்றியது என கூறுவர்.

உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் யோகா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மூச்சை இழுத்து வெளிவிடுவதின் மூலம், போதிய ஆக்சிஜன் மூளைக்கு செலுத்தி சுறுசுறுப்படைகிறது.

யோகாவால் உடலில் ஏற்படும் நன்மைகள் :

தினமும் யோகா செய்வதால் உடல் புத்துணர்ச்சி பெரும். இது நமக்கு நாமே சிகிச்சை செய்து கொள்வது போன்றது. மனதில் இருக்கும் நேர்மறை எண்ணங்களை போக்கியும், உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றும். வாழ்வில் புதிய விழிப்புணர்வுடன் வாழ்வதற்கு வழிவகுக்கிறது.

குழந்தைகள் யோகா செய்வதன் மூலம், கூர்மையான எண்ணங்கள், மன ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம், உடல் வளைவு தன்மையை கொடுக்கும். ஜீரணசக்தி, மூட்டுவலி, அடிவயிற்றுக்கு வலிமை கொடுக்கும்.

யோகாவின் மூலம் மனதையும், ஆன்மாவையும் ஒருங்கிணைக்க முடியும். மன அழுத்தம், உடல் சோர்வு, சரும புத்துணர்வு  ஏற்படும். உடல் எடை குறைய, நோய்நொடியின்றி வாழ, ஆரோக்கிய வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 36 மில்லியன் மக்கள் யோகாவில் ஈடுபட்டுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

பெண்களுக்கு உடல் ரீதியான பல பிரச்சைகளுக்கு ஹார்மோன்களே முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோட்டோசோன் போன்றவை சரியான நிலையில் வேலை செய்யவில்லை என்றால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையில் தொடங்கி ஒவ்வொரு பிரச்சனையாக உருவாகும். இவை சரி செய்ய யோகாசனமே சிறந்த வழி. அவைகள் :

பரத்வாஜாசனம் :

இதை செய்வதன் மூலம் உடல் உள் உறுப்புகள் செரிமான பிரச்னையை சரி செய்யும். வயிற்றில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும், அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். அட்ரீனல் சுரப்பியை வேலை செய்ய தூண்டும். வயிற்று தொடர்பான அனைத்து பிராட்சைகளுக்கும் இந்த ஆசனம் சிறந்தது.

அதோமுக சுவானாசனம் :

40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள், மாதவிடாய் நிற்கும் காலத்தில் வியர்வை, தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளை இந்த ஆசனம் சரி செய்கிறது.

பரிவர்த திரிகோணாசனம் :

சிறுகுடல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உல் உறுப்புகளின் வேலையை ஒருநிலைப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.