புத்தகம் மனிதனை மாற்றுமா?

ஒரு காலகட்டத்தில் புத்தகம் மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்து வந்தது. காலப்போக்கில் ஒவ்வொரு விஷயமும் மாற மாற, புத்தகங்களை விரும்பிப்படிக்கும் செயலும்நின்றுபோனது. பின்னர்புத்தகத்தின் மீது ஈடுபாடுகூட இல்லாமல் போய்விட்டது. இதற்கு காரணம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சினிமாவின் வளர்ச்சிதான் என்று அவற்றின் மீது பொதுவாக குறைகூற முடியாது. மக்களுக்கே ஈடுபாடு இல்லை என்று சொல்லலாம்.

ஏனென்றால், முன்பெல்லாம்ஒரு வீட்டில் சமையல் அறை, படுக்கை அறை என்பதைப்போல அமைதியாக புத்தகம் படிப்பதற்கென்று ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இப்பொழுது அந்த மாதிரியான செயல்பாடுகளும்எண்ணங்களும் மக்களுக்கு இல்லை.

புத்தகம் ஒரு மனிதனை மாற்றுமா? என்று ஒரு கேள்வி மக்களின் மனதுக்குள் வருவதுண்டு. ஒவ்வொரு நாட்டின் மண்ணின் பெருமையையும் அவற்றின்கலாச்சாரத்தையும் மிகப்பெரிய தலைவர்களின் வாழ்க்கையையும்அவர்களின்வால்க்கயொத் தத்துவத்தையும்நாம் புத்தகங்களின்மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும். சுஜாதா, கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்ற மிகப¢பெரிய ஜாம்பவான்களின் ஆளுமையான எழுத்துகளை பல புத்தகங்களில் நம்மால் இன்றும்உணர முடிகிறது.

பொதுவாக, நமது மக்கள்படிப்பதற்கு நேரம் கிடைப்பது இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒவ்வொருவருக்கும்குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கை அமைந்து இருக்கின்றது. அதில் இருந்து மீண்டு வருவதற்கும், ஏதாவது ஒன்றை வாழ்நாளில்சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கும் புத்தகம் ஒரு வழித்தடமாக இருக்கும் என்பதில்மாற்றுக் கருத்து இல்லை.

மூன்று நேரம் நாம் சாப்பிடுகிறோம். ஒரு நேரம் குளிக்கின்றோம். அதைப்போல் ஒரு நாள் ஒரு புத்தகத்தின் நான்கு பக்கங்களையாவது நாம் படிக்க வேண்டும். இதுவே மனிதனின் இயல்புத்தன்மை என்று புராணத்தில் முன்னோர்கள் சொன்னதாக செவி வழி தகவல்.

சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தில் ‘பொன்மாலைப்பொழுது’ என்று ஒரு நிகழ்ச்சி வாரம் ஒருமுறை நடக்கும். அதில் கடந்த வாரம் கலந்துகொண்டு பேசியது இயக்குநர் மற்றும் நடிகர் கரு. பழனியப்பன்.

அவர் பேசுகையில்கூறிய கருத்துக்கள், நூலகத்தின் பெருமைகளைக்குறித்து சிலரை ஆழமாக சிந்திக்க வைத்தது. கரு. பழனியப்பன் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவது வழக்கம். சென்னை மாநகரைவிட சின்ன ஊர் சிங்கப்பூர். ஆனால் அங்கு ஒன்பது நூலகம் இருக்கின்றது என்று கூறினார். அதைக்கேட்டு அனைவருக்கும் ஆச்சர்யம். ஒன்பது நூலகத்தில் எங்கு வேண்டுமானாலும் புத்தகம் எடுத்து, அதை எந்த நூலகத்தில் வேண்டுமானாலும் படிக்கலாம் என்று சொன்னார். அந்த செயல்பாடு நம் நாட்டுக்கும் தேவை. அப்பொழுதுதான் பல சமூக மாற்றங்களை நம்மால் உணர முடியும் என்று கூறினார்.

மேலும்அவர்கூறியதாவது, ‘நூலகம் என்பது ஒரு மனிதனின் மூச்சுக்காற்றைப்போல். மேலும், நூலகத்தில் உள்ள புத்தங்கங்கள் நூலகத்தைவிட்டு வெளியேபோய் திரும்பி வர வேண்டும். அப்போதுதான் பல அறிவுத்திறன் கொண்ட சக்திவாய்ந்த மக்கள் உருவாகுவார்கள். இளம் சமுதாயத்தினர்கண்டிப்பாக நூலகத்திற்கு சென்று புத்தகங்களைப்படிக்க வேண்டும். ஆனால் நாம் அதற்கு வழிவிடுவது கிடையாது. நூலகத்தில் இருக்கும் அலுவலர் என்ன செய்கிறார்? புத்தகம் அழுக்குப்படியாமல், கிழிந்துவிடாமல் பாதுகாத்து இளம் சமுதாயத்தினருக்கு புத்தகம் படிக்கும் எண்ணம் வராமல் தடுத்து விடுகிறார்கள். படித்து கிழித்தால்தான் அந்த புத்தகத்துக்கு பெருமை. பூட்டி வைத்து வருடம் முடியும்போது எல்லா புத்தகத்திற்கும்கணக்கு காட்டுவதனால்எந்தப்பயனும் இல்லை. வரும் காலங்களில் இந்த செயல் மாற வேண்டும் என்பது எனது கருத்து’’ என்று கூறினார்.

நூலகம் என்பது நம் நாட்டின் ஆணிவேர். அதை நம் சரியாகப்பயன்படுத்தினால் ஒவ்வொரு மனிதனுக்கும் நாட்டின் தலைவர் ஆகும் தகுதி உண்டாகும்.

– பாண்டிய ராஜ்