நியாபகம் வருகிறதா ? – உலக அகதிகள் தினம், ஜூன் 20

உலகம் முழுவதும் ஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் அப்பிரிக்க அகதிகள் தினமாகத்தான் ( Africa Refugee Day ) நினைவு கூறப்பட்டது. பின், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ( United Nations General Assembly ) சிறப்பு தீர்மானம்படி,  ஆப்பிரிக்க அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக,  உலக அகதிகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலகில் பஞ்சம், பட்டினி, வறட்சி, போர் அல்லது பல்வேறு வன்முறைகள், இயற்கை சீற்றங்களால் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் , அகதிகள் என அழைக்கப்படுகின்றனர்.எங்கு போவதென்று தெரியாமல், பிறந்த மண்ணை விட்டு, பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து பல துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்து வரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை,  உலக மக்களிடம் கொண்டுச் செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

இரண்டாம் உலகப்போரின்போது, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானோர் வெளியேறினர். அப்போதே, அகதிகள் ஒரு சட்டபூர்வ குழுவாக வரையறுக்கப்பட்டனர்.

அகதிகளுக்கு பாதுகாப்புத் தொடர்பான வேலைகளை செய்வது, ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) 2009ம் ஆண்டு ஜூன், சட்டத்திற்கு புறம்பான துன்புறுத்தல்கள், கலவரங்கள் காரணமாக உலகில் 42 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக பிபிசி உலக சேவை, அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) அல்லது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தாபனம் என்னும் அமைப்பானது அகதிகளை ஆதரிக்கவும், பாதுகாக்கவும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகள் மீட்பதற்க்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

ஐ.நா.சபை வெளியிட்ட புள்ளிவிவரம், உலகம் முழுவதும் 2.5 கோடி அகதிகள் உள்ளனர். 68% அகதிகள் 5 நாடுகளை சார்ந்தவர்களாக உள்ளனர். சிரியா 63 லட்சம், ஆப்கானிஸ்தான் – 26 லட்சம், தென் சூடான் – 24 லட்சம், மியான்மர் – 12 லட்சம், சோமாலியா – 9.8 லட்சம். 58% பேர் 18 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர்.

35 லட்சம் அகதிகளுக்கு துருக்கி அடைக்கலம் கொடுத்துள்ளது. அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள் பட்டியியலில் தொடர்ந்து 4 வருடமாக துருக்கி முதலிடத்தில் உள்ளது.

இலங்கையிலும் இது முக்கிய பிரச்சனையாக உள்ளது. விடுதலை புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக யுத்தத்தில் வாழ்ந்த இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனவே, ஒரு மனிதன் தான் பிறந்த மண்ணைவிட்டு, வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுவது என்பது மிகவும் வேதனைக்குள்ளானது. அந்த சூழலில் வரும் அகதிகளின் தேவை, அவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கென முறையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அகதிகளால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத சூழலில் அவர்களுக்கென  அனைத்து நாடுகளிலும் அரசு அங்கீகாரம் கொடுத்தால், அவர்களையும் தங்கள் மக்கள் போல ஆதரித்து, அவர்களின் வாழ்க்கையில் ஒரு விடிவு காலம் வர பாதையமைப்போம்…