டிக் டாக் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறது !

டிக் டாக், இந்த வார்த்தை தெரியாத ஒருவர் கூட இருக்கமுடியாது. காரணம் இந்த பெயர் ஒரு பொழுதுபோக்கு என்பதை தாண்டி இதன் மீது கொண்ட அடிமைத்தனம் தான் காரணம். இந்தியாவில் இந்த செயலி இல்லாத ஸ்மார்ட் போன்கள் மிக குறைவு. அந்த அளவிற்கு இது மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

சீனாவின் தலை நகரான பெய்ஜிங்கிள் தாலமி இடமாக கொண்ட ‘பைட் டான்ஸ்’ என்ற தொழில்நுட்ப நிறுவனமே தற்பொழுது இளைங்கர்கள் கையில் இருக்கும் இந்த செயலியை  கொடுத்தவர்கள்.

இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த செயலின் மூலம் பாடல்களுக்கு லிப் சிங்க் செய்தும்,பாடலுக்கு நடனம் ஆடியும் வீடியோக்கள் எடுத்து இதனை சமூக வளைதளங்களில் பதிவிடுவது இவர்களில் வழக்கமாக இருக்கிறது. இதற்கு மேல் ஒரு படி சென்று அதிக லைக் மற்றும் கமென்டுகாக இந்த வீடியோக்களில் கவர்ச்சியாகவும், ஆபத்தான சாகசங்களும் செய்து பதிவிடுகிறார்கள். இதற்காக இவர்கள் இவர்களின் உயிரை பணயம் வைத்து இதனை செய்து வருகின்றனர்.

இது இந்தியாவில் 11 மொழி உட்பட சர்வதேச அளவில் 150 மொழிகளில் இயங்கி வருகிறது. இது இளைங்கர்கள் கைக்கு வந்த குறுகிய காலத்தில் இது எந்த அளவிற்கு வளர்ந்ததோ அதே அளவிற்கு புகார்களும் வந்து கொண்டு இருக்கிறது

இதில் பதிவிட படும் வீடியோக்கள் கலாச்சார சீர்கேட்டை கெடுக்கும் வகையில் இருப்பதாக எழுந்த புகாரின் மூலம், இந்தியாவில் தன்னை தக்க வைத்து கொள்ளும் முனைப்பில் சுமார் 60 லட்சம் பதிவுகள் நீக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் 13 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பதிவுகள் இட தடைவிதித்துள்ளது.

உலக அளவில் 50 அலுவலகங்கள் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் தனி அலுவலகங்கள் கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் இந்த செயலியில் பதிவிடப்படும் வீடியோக்களை கண்காணிக்க மற்றும் பதிவிட அனுமதி அளிக்கவும் 500 பேர் கொண்ட பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.