40,000 வயது கொண்ட பனி ஓநாய் தலை

ரஷ்யாவின் சிபேரியா பகுதியின் ஆற்றங்கரையில் இருந்து பனி ஓநாய் ஒன்றின் தலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.இதுகுறித்து  நடத்திய ஆராய்ச்சியில் அது சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பனி ஓநாய் என்பது தெரியவந்துள்ளது. இது பனிபகுதியில் இருந்ததால் இதன் தலை பனியில் உறைந்து  அழுகாமல் இருப்பதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனை ரஷ்யாவின் ஆர்க்டிக் ரீஜியன் ஆஃப் யகுடியா என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் இது மிக நீண்ட தந்தங்களை கொண்ட ராட்சத யானைகள் வாழ்ந்த காலகட்டத்தில் இந்த ஓநாயும் வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பேரழிவால் ராட்சத யானைகளுடன் சேர்ந்து, இந்த ஓநாய் இனமும் அழிந்திருக்கலாம் என கணித்துள்ளனர். மேலும், இந்த ஓநாய் மண்டை கிடைத்திருப்பதை அரிய கண்டுபிடிப்பாக ஆராய்ச்சியாளர்கள் வியப்புடன் காண்கின்றனர்.
(source: Daily karan)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*