நீங்கள் தோனி  ரசிகரா? உங்களுக்கு உணவு இலவசம் !

மேற்குவங்கம், அலிப்பூர்துவாரில் ஷாம்பு போஸ் தான் இதுபோன்ற அசத்தல் ஆஃபருடன் கூடிய ஹோட்டலை நடத்தி வருகிறார்.

இங்கு நீங்கள் தோனி ரசிகன் என்று சொன்னால் போதும் சாப்பாடுக்கு பில் போடுவது இல்லை, சாப்பிட்டு நீங்கள் பணம் கொடுக்காமல் தாராளமாக வெளியே வரலாம். ஷாம்பு போஸ்  என்பவர் சிறுவயதில் இருந்தே M.S. தோனியின் ரசிகராக உள்ளார். அதுமட்டுமல்லால் இவர் ஹோட்டல் M.S. தோனி என்ற கடையும் வைத்துள்ளார். இந்த ஹோட்டல் பற்றி இங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். இங்கு சாப்பிட வருபவர் அனைவரும் M.S. தோனியை பற்றி பேசிக்கொண்டே சாப்பிடுவார்களாம். அந்த அளவிற்கு தோனியின் புகழ் ஓங்கி நிற்கிறது.

தோனியிடமிருந்து நிதானம், பொறுப்பு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன். வாழ்நாளில் அவரை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அவரது ஆட்டத்தை மைதானத்தில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கான பண வசதி என்னிடம் இல்லை என கவலை தெரிவித்துள்ளார்.

தோனியைச் சந்திக்க வேண்டுமென்ற கனவு என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக நிறைவேறும். அன்று அவரிடம் நான் மிகப்பெரிய கோரிக்கையை அவர்முன் வைப்பேன். என்னுடைய ஹோட்டலுக்கு வந்து அவர் சாப்பிட வேண்டுமென்பது தான். எனக்குத் தெரியும் அவருக்கு பிடித்த உணவு சாப்பாடும், மீனும் தான். அதை அவருக்கு நான் கொடுப்பேன் என்கிறார் ஷாம்பு போஸ்.

இவரின் ஆசை என்றாவது ஒருநாள் கண்டிப்பாக நிறைவேறும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*