குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு

டாக்டர்.ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் துண்டுபிரசுரங்கள் வினியோகித்தனர். இதில் “குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுப்போம் அவர்கள் வாழ்வைக் காப்போம்”,”குழந்தை தொழிலாளர் இல்லாத புது உலகம் படைப்போம்”, “இன்றைய குழந்தைகள் நாளை நம் நாட்டின் குடிமகன்கள்”என்ற வாசகங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பத்து பேர் கலந்து கொண்டு பிரசுரங்கள் வழங்கி  இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்  எஸ்.பிரபாகரன், ஆங்கிலத் துறை பேராசிரியர் வெங்கடேசன்  அவர்கள் கலந்துகொண்டதோடு கல்லூரி முதல்வர் வே.சுகுணா அவர்களது தலைமையில் இதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*