ஆழ்கடலின் ஆச்சர்யம் !

விண்வெளியில் இருந்து பூமியை பார்க்கும் போது, அதில் பாதிக்கு மேல் உள்ள பகுதிகள் நீலநிறமாகத்தான் தெரியும். காரணம் பூமியின் மேற்பரப்பில் 71% கடல் நீரால் நிரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மனிதனுக்கு 70% ஆக்சிஜன் கடலின் மூலமாக தான் கிடைக்கிறது.

அப்படிப்பட்ட கடல் மிகவும் அமைதியானது, அழகானது, அதிசயமானது, அதைபோல் ஆழமானது, அதைவிட  மர்மமானது. ஆழ்கடலில் எண்ணற்ற தாவரங்களும், உரினங்களும் வாழ்கின்றன. இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால், உலகில் உள்ள உயிரினங்களில் 94% கடலில் தான் இருகின்றது. இதில் மூன்றில் இரண்டு பங்கு உயிரினங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

இது கண் கவரும் வகையில் அழகாக இருந்தாலும், இதனின் செயல்கள் அபாயகரமானதாக இருக்கும். இதுவரை மனிதன் கடலின் 5 சதவீத இடத்தை மட்டுமே பார்த்திருக்கிறான். இருப்பினும் கடற்கரைகள் அனைத்தும் கூவம் ஆகிவிட்டது. கடலின் அளவு இதுவரை எட்டு அங்குலம் உயர்ந்துள்ளது. ஆழ்கடலின் சராசரி ஆழம் 4 கிலோமீட்டர்.

நாம் கடலில் சிறுநீர் கழிப்பது கடலுக்கு நல்லது. அதாவது சிறுநீர் யுரியாவில் உள்ள நைட்ரஜன் கடல் தாவரங்களுக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது.

உலகத்திலேயே மிக பெரிய மலைத்தொடர் அட்லாண்டிக் முதல் இந்திய, பசுபிக் பெருங்கடலில் முடிகிறது. இதன் நீளம் 35,000 கிலோமீட்டர். இது மொத்தமும் கடலுக்குள் மூழ்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகத்தின் மிக உயரமான வெனிஸுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்விழ்ச்சியை விட 3 மடங்கு உயரமும், நியாகரா நீர்விழ்ச்சியில் விழும் நீரை விட 2000 மடங்கு அதிகமான நீர் விழும் பிரமாண்ட அருவி கிரீன்லேண்டுக்கும்,  ஐஸ்லேண்டுக்கும் இடையில் கடலுக்குள் இருக்கிறது. இதன் உயரம் 11,500 அடி. இதற்கு காரணம் வெப்பநிலை மாற்றம் தான் காரணம் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இது வெளியில் தெரியாததால் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஹெரால்ட் ஹக்கிட் என்பவர் கடலை வாட்ஸ் ஆப்பாக பயன்படுத்துகிறார். ஒரு பாட்டலில் தனது பெயர் முகவரியுடன் கடிதம் எழுதி இதுவரை 4800 கடிதம் அனுப்பியுள்ளார். அதிலிருந்து 3,000 கடிதத்திற்கு பதிலும் வந்துள்ளது. ஆச்சரியம் தான்.