சிறுநீரகத்தின் விலை 3 கோடியா!

இணையதளம் என்பது இந்த உலகத்தின் இதயமாக இயங்கி வருகிறது. இது தகவல் தொடர்பு துறையின் உச்சக்கட்ட பரிணாம வளர்ச்சி. இதன் மூலம் இந்த உலகத்தில் உள்ள அதனை தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இது தற்பொழுது உலக மக்களின் அடிப்படித்தேவைகளில் ஒன்றாக இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை. அந்த வகையில் இது எந்தளவிற்கு நன்மைகளை செய்கிறதோ அந்த அளவிற்கு தீமைகளையும் கொடுக்கிறது. அதாவது இதனை தவறாக பயன்படுத்துவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இதன் மூலம் ஈரோடு சம்பத்நகர் பகுதியில் தனியார் சிறுநீரக சிகிச்சை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இந்த மருத்துவமனையில், சிறுநீரக பிரச்சினைக்கான அனைத்துவித சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடக்கி அதன் மூலம் பொதுமக்களுக்கு, சிறுநீரகம் கொடுக்க விரும்புவோருக்கு 3 கோடிஎன அறிவித்தனர்.  அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும்,  பதிவுகட்டணமாக 15 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் முகநூல் மற்றும் வெவ்வேறு இணையதளத்திலும் இதே போன்று சிறுநீரக விற்பனை குறித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சிறுநீரகம் வழங்குபவர் மருத்துவமனையில் பரிசோதனையின் போது 1.5 கோடியும், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு பின் 1.5 கோடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பிய ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷரவந்தி என்கிற பெண், முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த வங்கிக் கணக்கில் மார்ச் 1-ம் தேதி ரூ.15 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து எந்த வித தகவலும் வராததால் குறிப்பிடப்பட்ட மருத்துவமனையை தொடர்பு கொண்டுள்ளார்.  இது ஒரு மோசடி என்று மருத்துவமனைக்கு தெரிய வந்ததுள்ளது. இதனை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.பிரபாகர், மாவட்ட எஸ்.பி எஸ்.சக்தி கணேசனிடம் புகார் அளித்தார். ஏராளமானவர்கள் இதில் ஏமாற்றப்பட்டுள்ளதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த முகநூல் பக்கம் முடக்கப்பட்டது. இருப்பினும் இதை போன்று இன்னும் நிறைய வடமாநிலத்தை சேர்ந்தோர் மருத்துவமனையை தொடர்புகொண்டு சிறுநீரகம் வழங்க தயார் என்று கூறிவருகிறார்கள்  என்று இந்த  மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

அதனால் சமூக வலைத்தளங்களில் இதனை போன்ற ஆசை வார்த்தைகள் கொண்ட விளம்பரம் வந்தால், அதனை உறுதி படுத்திகொள்ளுங்கள், தெரியாமல் அதனை நம்பி ஏமாற வேண்டாம்.