இந்தியாவிலேயே முதன் முறையாக தானியங்கி ரசீது வழங்கும் ஸ்மார்ட் கேமிரா

இந்தியா உலகளவில் ஒரு வளர்ந்து வரும் நாடு. அதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும். பல வகையில் நம் நாடு முன்னேறி உள்ளது போல, சாலை விபத்துகளிலும் முன்னேறியுள்ளது. இது சந்தோசப்படக்கூடியது அல்ல. இதனை கட்டுப்படுத்த இல்லை முற்றிலும் ஒழிக்க உயிர் அறக்கட்டளை இந்த முயற்சியை எடுத்துள்ளது. இது மக்களுக்கு விபத்துகளை குறைப்பதற்காக மட்டுமல்லாமல் மக்கள் சட்டங்களை பின்பற்றவேண்டும் என்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் இது கோவையை ஒரு ஸ்மார்ட் நகரமாக மற்றும் முயற்சி இது.

இதன் முதற்கட்டமாக கோவையின் முக்கிய சாலையான அவிநாசி சாலையில் 4 சந்திப்புகளில் நவீன ஸ்மார்ட் கேமராகளை கோவை காவல் துறையுடன் இணைந்து உயிர் அறக்கட்டளை அமைத்து உள்ளது. இது சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை மீறி வண்டிகளை ஓட்டும் நபர்களின் வாகன பிளேட் மற்றும் அவர்களின் முகம் தெளிவாக தெரியும் விதமாக இந்த கேமராக்கள் மிகவும் துல்லியமான படத்துடன் பதிவு செய்யும். இதற்காக சிறப்பு சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது. இது விதிமுறை மீறல் நடைபெறும் இடம், நேரம், ஆகியவற்றை துல்லியமாக படத்துடன் பதிவு செய்யும். இந்த சாப்ட்வேர், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள், சாலைவிதிகளை மீறுபவர்கள், சிவப்பு விலாகை மதிக்காமல் செல்பவர்கள் மற்றும் ஸ்டாப் லைனை தாண்டி நிறுத்துபவர்களை அடையாளம் கண்டறியும்.

இந்த விபரங்கள் சம்பத்தப்பட்ட போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு  நோட்டிஸ் அனுப்பப்படும். அந்த நபர் எந்த நகரில் எந்த இடங்களில் சாலை விதிகளை மீறி இருந்தாலும் அவை அனைத்தும் கண்டறிந்து இந்த சாப்ட்வேர் பட்டியலிடும் வகையில் வடிவமைக்கப்பட்டள்ளது. இதன் மூலம் விவரங்கள் அனைத்தும் ஒரே ரசீதில் பெற முடியும். இது 15 நாட்களுக்கான ரெக்கார்ட்கான சேமிப்புகள் வசதி மற்றும் சோலார் பேனல் அமைப்பதனால் 3 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் இயங்கும் வசதி ஏற்பத்தப்பட்டுள்ளது.