அஜித்தின் தன்னம்பிக்கை எனக்குப்பிடிக்கும்

கதா பாத்திரம் எந்த அளவுக்கு முக்கியமானத இருக்கிறதோ அந்த அளவுக்கு கதையின் ஆழத்தை படம் பார்க்கும் நமக்கு தெளிவாக புரிய வரும். கதா நாயகன் இருக்கும் கதையில் கண்டிப்பா வில்லன் கதா பாத்திரம் இருக்கும்.. சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் வில்லி கதா பாத்திரம் தமிழ் சினிமாவில் பெரியதாக பேச பட்டது ,உதரணத்துக்கு படையப்பா நிலம்பரி ரம்யா கிருஷ்ணன், பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சிம்ரன் , தூள் படத்தில் சொர்ணக்க என்று பல கதா பாத்திரம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது ,. தொலைக்காட்சி சீரியல் மக்கள் தொடர்ந்து பார்க்க தொடங்கிய பிறகு பெண்களை மைய்ய படுத்தி பல சீரியல் எடுத்து வருக்கின்ரானர். சன் தொலைக்காட்சி யில் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பு ஆகும் தொலைக்காட்சி தொடரியில் முக்கியமாக பெண் வில்லி கதா பாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுத்து எடுக்க படுகிறது. எதனால் என்று விசாரித்து பார்த்தால் . மக்கள் அனைவரும் ரசிக்கும் அளவுக்கு கதையில் உள்ள வில்லி கதா பாத்திரம் இருக்கினறது என்று பல குடும்ப பெண்கள் தெரிவித்து உள்ளனர்,.. இது ஒரு பக்கம் இருக்க மக்கள் க்கு எந்த தொடரியில் வரும் வில்லி கதா பாத்திரம் உங்களை கவர்ந்தது என்று கேட்டதுக்கு 8 மணிக்கு ஒளிபரப்பு ஆகும் நாயகி தொடரியில் வரும் சுஷ்மா நாயர் நடிப்பு பலரை கவர்ந்து இருக்கிறது என்று தெரிய வந்த உடன் அவரை தேடி கண்டு பிடித்து அவரின் வாழ்க்கையில் நடந்தா சுவாரசிய நிகழ்வுகளை கேட்டு அறிந்தோம் ..
 வணக்கம் ,.. ரொம்ப சந்தோஷமாக உள்ளது உங்களை சந்தித்தது , ஷூட்டிங் ஒரு பக்கம் இருந்தாலும் என்னை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கு பெருமை வாய்ந்த விஷயம் ,.. என் கல்லூரி படிப்பு முழுக்க பெங்களூர்யில் படித்தேன் . எங்க அப்பா அம்மா என் கனவை நிஜமக்க ரொம்ப எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் .. எனக்கு சின்ன வயதில் இருந்தே சினிமா மிது தனி ஆர்வம் இருக்கும், எனக்கு பிடித்த படங்கள் எதுவாக இருந்தலும் பல முறை பார்த்து ரசிக்க கூடியவள் நான்,. என் பள்ளி படிப்பை முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்று யோசிக்கும் போது ஆடை வடிவமைப்பு பற்றி படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஏற்பட்டது. அதற்காக கடுமையாக படித்து கொண்டு இருந்தேன் அப்போது சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்றால் பல விஷயங்கள் நாம் கத்து இருக்க வேண்டும் என்று எனக்கு புரிய வந்தது ,. அதற்காக என் பயணத்தை தேட தொடங்கினேன். சன் தொலைக்காட்சியில் மதியம் ஒளிபரப்பு ஆகும் சுமங்கலி தொடர்யில் நடிக்க எனக்கு வாயுப்பு கிடைத்தது ,. அதற்கு காரணம் அதில் நடிக்கும் சுஜித் என்னை அழைத்து முக்கியமான கதா பாத்திரம் இருக்கிறது நீங்கள் நடிக்க வேண்டும் என்று என்னை அணுகினர் , நானும் சேரி என்று சொல்லி அதில் நடித்தேன். அதற்கு நடுவில் என் கல்லூரி படிப்பை முடித்து விட்டு இரண்டு கன்னட படங்களில் ஆடை வடிவுஅமைப்பாளராக பணியாற்றினேன்,. மீண்டும் எனக்கு ஒரு வாயுப்பு நாயகி தொடர் முழியமகா எனக்கு வந்தது. கிடைத்த கதா பாத்திரத்தை சரியாக செய்ய வேண்டும் என்று என் மனதில் ஆழமாக முடிவு எடுத்து கொண்டு களத்தில் குதித்து விட்டேன்,.. ஒவ்வொரு நாளும் நான் ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகுதான் எனக்கு தெரிய வந்தது நான் நடிக்கும் கதா பாத்திரம் கதையின் பயணத்தை கவனிக்க கூடியதாக இருக்கும் என்று,. மனதில் ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் நம்மை தமிழக மக்கள் ஏற்று கொள்வார்களா என்ற ஒரு அச்சம் என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது ,.. பிறகு நாட்கள் செல்ல செல்ல என்னை சிலர் அணுகி என்னை பாராட்ட தொடங்கினார்கள். பாராட்டை பெற்ற பிறகு இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது,..
நடிப்பில் என்னை தயார் படுத்தி கொள்ள உலக சினிமா பார்ப்பது மற்றும் இந்தியா சினிமாவை பார்ப்பது எனக்கு வழக்கம்.. ஒவ்வொரு நாளும் என் நடிப்பில் வித்தியசம் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான்…. என் சிறு வயதில் தல அஜித் படங்களை பார்த்து வழந்தவள் , தீனா படத்தை பார்த்து விட்டு தீனா மாமா என்று சொல்லி அஜித் சார் யை பற்றி பலரிடம் பேசுவேன்.. அவரின் நடிப்பு மற்றும் தன்னம்பிக்கை என் வாழ்கையில் முக்கியமானதாக நான் கருதுகிறேன்,.நாயகி தொடர்யில் நடிக்கும் என் நண்பர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் ,. இயக்குநர் எனக்கு எந்த மாதிரியான நடிப்பு வேணும் என்பதை புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்து எனக்கு பெரும் புகழும் பெற்று கொடுத்து வருகிறார்.. நாயகி தொடரில் என் நடிப்பை பார்த்து விட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி என்று என்னிடம் கேட்கும்போது மனதுக்குள் சொல்ல முடியாத சந்தோசம் இருக்கும். நம் நடிப்பு பார்ப்பவர்களை எந்த அளவுக்கு கவர்ந்து உள்ளது என்பதை,.. வரும் காலங்களில் என் வில்லி நடிப்பு பார்த்து நீங்கள் எல்லாரும் கண்டிப்பாக வியப்பு அடையும் அளவுக்கு கதை இருக்கின்றது,. மெம்மலும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களுக்கு நீங்கள் உங்கள் ஆதரவை தர வேண்டும்,. பெற்றோர்களை மதித்து அவர்களை சந்தோசமாக வைத்து கொண்டு நம் லட்சிய பாதையில் வெற்றி பெற வேண்டும், இதை ஒவ்வொரு பெண்களும் செய்ய வேண்டும்,. வாழ்க்கை வாழ்வதற்கு என்று சொல்லி கொண்டு விடை பெறுகிறேன் நன்றி –பாண்டிய ராஜ் …