கின்னஸ் சாதனைப் படைத்த ஏரியல் இந்தியா !

சுமைகளைப் பகிர்வோம் என்ற உலகின் மிகப்பெரிய பிரச்சாரம் வாயிலாக கின்னஸ் சாதனைப் படைத்த ஏரியல் இந்தியா!

பாலிவுட் நடிகர் அனில்கபூர் முன்னெடுக்க, ஏரியலின் மகன்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வான‘ஷேர் தி லோட்’ (#ShareTheLoad ) மூலமாக 400 ஆண் பிள்ளைகள் வீட்டு வேலைகளை எடுத்து செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஏரியலின் சமீபத்திய பிரச்சாரமான சுமைகளைப் பகிர்வோம் (#ShareTheLoad) வரலாற்று கொண்டாட்டத்தில், ஏரியல் இந்தியா  கின்னஸ் உலக சாதனை சான்றிதழை பெற முயற்சித்து, அதில் வெற்றியும் கண்டுள்ளது. இன்றைய சமூக சூழலில் வளரும் ஆண் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய சலவை குறித்த புரிதலை ஏற்படுத்தி வீட்டிலுள்ள பெண்களுக்கு இணையாக, வீட்டு வேலைகளை எடுத்துச் செய்யும் உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சார இயக்கத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் நட்சத்திரமான அனில்கபூர் ஒரு தந்தையாக, ஒரு கணவராக தனித்து விளங்குபவர். அவர் வாயிலாக இந்த ஊக்கத்தை முன்னெடுத்தது ஏரியல்.

ஏரியல் இந்த ஆண்டு தொடக்கத்தில், அவர்களின்  சுமைகளைப் பகிர்வோம் (#ShareTheLoad) இயக்கத்தின் -3வது பதிப்பை வெளியிட்டது. தற்போதைய தலைமுறையினர், தங்கள் மகன்கள் மற்றும் மகள்களை வளர்ப்பதைப் போன்று வீட்டு வேலைகளை கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். தவிர, அடுத்த தலைமுறையின் ஆண், பெண் சமத்துவம் உள்ள சமூகத்தை  உருவாக்க வேண்டும்  உள்ளிட்டவற்றை ஊக்குவித்தது இந்தப் பிரச்சாரம். இந்தப் பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பிரபல மந்திரா பேடி சலவைக் குறித்த மிகப்பெரிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார். ‘சுமைகளைப் பகிர்வோம்’பிரச்சாரத்தின்படி தங்கள் மகன்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்னும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். இதன்மூலம் 400 ஆண்மகன்கள், சலவை செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள  முன்வந்தனர். இது ஏரியல் சலவை வேலையை இன்னும் கொஞ்சம் சுலபமாகிவிட்டது.

இந்த உலகளாவிய  இந்த நிகழ்வின் அங்கமாக இருப்பது, உற்சாகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்  பாலிவுட் நட்சத்திரம் அனில் கபூர். சுமைகளைப் பகிர்வோம் பிரச்சாரம் பற்றி பேசுகையில், `குழந்தைகள் சிறுவயதில் பல்வேறு நல்ல பழக்கவழக்கங்களையும் மதிப்புகளையும் தங்களுக்குள் வைத்திருப்பார்கள். எங்களை சரியாக வளர்த்ததற்காக என் அம்மாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.  அதனால்தான் நான் சுனிதாவை திருமணம் செய்த போது, அவருக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு இயற்கையாகவே வந்துவிட்டது. நாங்கள் இருவரும் ஒன்றாக எங்கள் குழந்தைகளுக்கு அதே மதிப்புகளை கற்பிக்க முயற்சித்தோம். அவர்களின் பாலினம் எதுவாக இருந்தாலும் சரி, அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் அவர்களுக்குள் இருக்கும். மேலும் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் மதிப்புகளையும் கடைபிடிக்கிறார்கள். என் மகள், தன் கனவுகளையும் செயல்களையும் நம்பும் ஒருவரை திருமணம் செய்துகொள்ளத் தேர்ந்தெடுத்தார் என்றால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இந்த சுமைகளைப் பகிர்வோம் கின்னஸ் சாதனை நிகழ்வில் நானும் பங்காற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது ஏரியலின் ஒரு புரட்சிகர நடவடிக்கை ஆகும். இது குடும்பங்களுக்குள்ளே சமத்துவத்திற்கான காரணத்தை அதிகப்படுத்தும். சுமைகளைப் பகிர (#ShareTheLoad ) வேண்டியது முக்கியம். அது நாடு முழுவதும் மகிழ்ச்சியான வீடுகளுக்கு வழிவகுக்கும்!” என்று நெகிழ்வுடன் பேசினார் .

பி & ஜி இந்தியாவின் மார்கெட்டிங் இயக்குநர் சோனாலி தவான் பேசுகையில், “இது வீட்டிற்குள் சமத்துவமின்மையை பற்றி பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறது. இந்த ஆண்டு, நாங்கள், இளைய தலைமுறையினர் மீது கவனம் செலுத்தி வருகிறோம். அவர்கள் சமத்துவம் பற்றி அறிந்து வளர்க்கப்பட்டால், ஒரு தலைமுறை சமத்துவ சிந்தனைகளுடன் வளரும். மகன்களுக்கான சுமைகளை பகிர்வோம் (Sons #ShareTheLoad) பிரச்சாரம் வாயிலாக இன்றைய தலைமுறை ஆண் பிள்ளைகளை சமத்துவத்துடன் வளர்க்க பெற்றோர்களை வலியுறுத்துகிறோம். இதனால் அடுத்த தலைமுறையில் சமத்துவம் தழைத்தோங்கும். இந்த முழுப் பொறுப்பும் பெற்றோர்களிடத்தில்தான் உள்ளது. ஆண் பிள்ளைகளையும் வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன பொறுப்புகளையும் தானாக முன்வந்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். மிகப்பெரிய சலவை பற்றிய பிரசாரம் மேற்கொள்வதில் சின்னஸ் சாதனை சான்றிதழ் பெற வேண்டும் என்ற முயற்சி சமத்துவத்தை வலியுறுத்தவே ஆகும். மாற்றத்தை உருவாக்குவதில் எப்பொழுதுமே ஏரியலின் பங்கு இருக்கும். சலவை செய்வதும், சுமைகளை பகிர்ந்து கொள்வதும் ஏரியல் மூலமாக சுலபமாகிவிடும்’’ என்று முடித்தார்.