ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிங்கப்பூர் அமிட்டி கல்வி நிறுவனங்களுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமானது சமீபத்தில் சிங்கப்பூரில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் – ன் தலைமை செயல் அதிகாரி வி. ராமகிருஷ்ணா மற்றும் சிங்கப்பூர் அமிட்டி கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தலைவர் மற்றும் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி ரங்கசாமி இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்திற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் கு.கருணாகரன் அவர்கள் தலைமை வகித்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் அமிட்டி குளோபல் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து மேலாண்மை அறிவியல் புலத்தில் மாணவர்கள் பரிமாற்ற நிகழ்வு, பேராசிரியர்கள் பரிமாற்ற நிகழ்வு மற்றும் இவ்விரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து  ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  இதன் குறிக்கோள்கள், இரு நிறுவனங்களும் இணைந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆய்வுகள் அதைச் சார்ந்த அனுபவங்கள் மற்றும் தகவல்களைப் பரிமாறல், கல்வியை சர்வதேச அளவில் மேம்படுத்துதல், இரு நிறுவனங்களும் ஆய்வு சார்ந்த அறிவை பரிமாறல் ,ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல் மற்றும் தொடர்ந்து இரு நிறுவனங்களுக்கு இடையே கல்வி சார்ந்த செயல்பாடுகளை நிகழ்த்துதல், சர்வதேச அளவிலான கல்வி ஆய்வு மாநாடுகள், கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள் நடத்துதல், இரு நிறுவனங்களும் இணைந்து ஆய்விதழ்களில் கட்டுரைகள் மற்றும் புத்தகங்கங்களை வெளியிடல், ஆகியவை உள்ளன.