கேஎம்சிஹெச் மருத்துவமனை மற்றும் FICCI FLO புரிந்துணர்வு ஒப்பந்தம்

+2 தேறிய/தவறிய ஏழை மாணவிகளுக்கு மத்திய அரசு அனுமதி பெற்ற, வேலைவாய்ப்பு அளிக்கும் ஒருவருட கால மருத்துவ சேவை சான்றிதழ் படிப்பை இலவசமாக அளித்திட கேஎம்சிஹெச் மருத்துவமனை மற்றும் FICCI FLO புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கே.எம்.சி. ஹெச் மற்றும் FICCI FLO (ஃபெடரேசன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இண்டர்ஸ்ட்ரி ) இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்ந்தத்தில் கையெழுத்து  இட்டுள்ளனர். இதன் மூலமாக +2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ள ஏழை மாணவிகளுக்கு ஓராண்டு இலவச நர்சிங் சம்மந்தமான பாட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கபடும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கே.எம்.சி. ஹெசின் துணை தலைவர் டாக்டர்.தவமணி D பழனிசாமி, முதன்மை செயல் அதிகாரி டாக்டர். ஜெ.சிவகுமாரன் மற்றும் புளோ கோவை தலைவர் பூனம் பாஃனா ஆகியோர் கையெழுத்திட்டனர். நர்சிங் உதவியாளர்கள், ஆம்புலென்ஸ் டெக்னீசியன், எமர்ஜென்சி டெக்னீசியன், ஐசியூ டெக்னீசியன் மற்றும் மருந்தாக உதவியாளர் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ் பெற்றவர்கள் கே.எம்.சி.ஹெசில் பணியில் அமர்த்தபடுவார்கள்.

இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு தகுதி உடைய மாணவிகளுக்கு இரு அமைப்பும் சேர்ந்து அழைப்பு விடுத்தனர்.