காஸாகிராண்ட் ‘LEAD’ கோவையில் தொடக்கம்

காஸாகிராண்ட் அகாடமி தன்னுடைய முதல் ஸ்கில் டெவலப்மெண்ட் திட்டம் – ‘LEAD’ (Lean Enhance Advance & deploy)ஐ கோயமுத்தூரில் தொடங்கியுள்ளது.

காஸாகிராண்ட் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கற்றல் மற்றும் அபிவிருத்தி பிரிவான காஸாகிராண்ட் அகாடமி இன்று ராமகிருஷ்ணா மிஷன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்து கோயமுத்தூரில் ‘LEAD’ (Lean Enhance Advance & deployஎன்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதன் தொடக்க விழா, கல்லூரிகளுடனான காஸாகிராண்ட் நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவது ஆகியவை, காஸாகிராண்ட் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள பிரிவு மூத்த துணைத்தலைவர் ராஜேஷ்குமார் கணேசன், என்.ஐ.ஏ இன்ஸ்டிடியூஷன்ஸ் செயலாளர் சி.ராமசுவாமி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி பொறுப்பு முதல்வர் ஆர்.மணிவண்ணன், எஸ்.ஆர்.கே.வி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐடிஐ தாளாளர் சுவாமி அனபிக்ஷானந்தா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இந்த தனித்தன்மை வாய்ந்த லீட் திட்டமானது, காஸாகிராண்ட் அகாடமியின் வல்லுநர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் திறனை மேம்படுத்தி அவர்கள் இலக்கை அடைய உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில், திறமை அடிப்படையில் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு 90 நாட்களுக்கு பிரத்தியேகமாக சிவில் மற்றும் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் (எம்.இ.பி) பயிற்சிகள் வழங்கப்படும். இந்த 90 நாளில். 60 நாள் வகுப்பறை மற்றும் செய்முறை பயிற்சி ஆகவும், அடுத்த 30 நாள் நேரடி வேலை பயிற்சியாகவும் இருக்கும். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு காஸாகிராண்ட் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முழு நேர ஊழியர் பணி வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கான முழு செலவையும் காஸாகிராண்ட் அகாடமியே ஏற்றுக்கொள்கிறது. மேலும், இந்த பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.7,500/= பயிற்சி கால நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

காஸாகிராண்ட் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் மனித வளம் பிரிவு மூத்த துணைத் தலைவர் ராஜ்குமார் கணேசன் அவர்கள் இந்த திட்டத்தைக் குறித்துப் பேசுகையில், தேவையான தொழில்துறை சார்ந்த கல்வி அறிவை அளிப்பதன் மூலம் இளைஞர்களை திறன் மிக்கவர்களாக மாற்றி அவர்களுக்கு முறையான வேலை வாய்ப்பை வழங்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த பயிற்சியின்போது இந்த தொழில்துறைக்கு ஏற்ற வகையில் இவர்களை மாற்ற இந்த தொழில்துறையைச் சார்ந்த வல்லுநர்கள் பயிற்சி அளிப்பார்கள். எதிர்காலத்தில், அதிக மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் இந்த திட்டத்தை மேலும் பல பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளோம்” என்றார்.

காஸாகிராண்ட் சார்பில் தேந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்களும் வெல்கம் கிட் வழங்கப்பட்டது.