டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் முதலாவது கிளை துவக்கம்

பிரபல நடிகை ஆண்டரியா கண் தான நிகழ்வை துவக்கி வைத்தார்

திருப்பூர், இன்று உலக புகழ்பெற்ற டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கிளை திருப்பூரில் துவக்கப்படவுள்ளது. உலகத் தரம்வாய்ந்த சிகிச்சைகள் திருப்பூர் நகர மக்களுக்கு கிடைக்கும் வகையில், இந்த மருத்துவமனை துவங்கப்படவுள்ளது. மேலும், இம்மருத்துவமனை துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஆண்டரியா கண் தானத்தை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்றோர் கண்தான உறுதிமொழியை ஏற்றனர்.

இவ்விழாவில் மருத்துவமனை கிளினிக்கல் சர்வீஸ் பிரிவுத் தலைவர் டாக்டர் அஷர் அகர்வால், மருத்துவச் சேவைப் பிரிவுத் தலைவர் டாக்டர் எல்.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பினர்.

இவ்விழாவில் நடிகை ஆண்டரியா பேசியதாவது திருப்பூரில் அகர்வால் கண் மருத்துவனையின் கிளை துவங்கப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், கண்தான உறுதிமொழியை ஏற்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு மருத்துவமனை நிர்வாகத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் கண்களை இறப்புக்குப் பிறகு தானம் செய்ய முன்வர வேண்டும். இத்தகைய செயல்கள் கண்பார்வை இல்லாதோர் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். நான் சிறுவயதாக இருக்கும்போது உலக புகழ் நடிகை ஐஸ்வர்யாராய் தனது கண்களை தானம் செய்தார். அவரைப்பார்த்து நிறைய பேர் தங்களது கண்களை தானம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து நான் எனது கண்களை தானம் செய்து உள்ளேன். மேலும் இங்கு கண் தான விழிப்புணர்வு திட்டத்தையும் துவக்கி வைத்து உள்ளேன். என்னை போல் மற்றவர்களும் கண்தானம் செய்ய முன்வரவேண்டும். தற்போது நாட்டில் கண் விழி தேவை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் வீணாக மண்ணில் புதையும் கண்களை தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கிடைக்கும். இதுவரை டாக்டர் அகல்வார் மருத்துவமனையின் 3 கிளைகளை துவக்கி வைத்து உள்ளேன். இது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்றார்.

விழாவில் மருத்துவமனை மருத்துவமனை கிளினிக்கல் சர்வீஸ் பிரிவுத் தலைவர் டாக்டர் அஷர் அகர்வால் பேசியதாவது :- கண்களில் ஏற்படக் கூடிய நோய்களில் 80 சதவீதம் நோய்கள் குணப்படுத்தக் கூடியவைதான். ஆனால், அதற்கு நோய்களை முன்கூட்டிய கண்டறிய வேண்டியது மிகவும் அவசியம். பெருநகரங்களில்தான் உலகத் தரம் வாய்ந்த கண் சிகிச்சை கிடைத்து வந்தது. அத்தகைய சிறப்பான சிகிச்சை தற்போது திருப்பூர் மக்களுக்கு கிடைக்கும் வகையில் இந்த மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது. பனியன் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் திருப்பூரில் கண் மருத்துவமனை துவக்குவதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம் என்றார்.

விழாவில் மருத்துவமனை மருத்துவச் சேவைப் பிரிவுத் தலைவர் டாக்டர் எல். சீனிவாசன் பேசியதாவது :- இந்த மருத்துவமனை எண் 32 ராய பந்தாராம் தெரு, புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே, திருப்பூர் என்ற முகவரியில் செயல்படவுள்ளது. மருத்துவமனையில் அனைத்து வகையான கண் நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இங்கு கண்புரை, கிளுக்கோமா, விழித்திரை நோய்கள், கண் நரம்பியல் நோய்கள், மற்றும் குறைந்த பார்வை நோய்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் அதிக அனுபவம் கொண்ட கண் சிகிச்சை நிபுணர்கள் பலர் பணிபுரிகின்றனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிறப்பான அதே சமயம் தரமான சிகிச்சையை வழங்குவர். இந்த மருத்துவமனையுடன் ஆய்வுக் கூடம், மருந்தகம், அறுவைச் சிகிச்சைக் கூடம் ஆகியவை இருக்கின்றன. நேரடியாக அறுவைச் சிகிச்சை வெளிநாடுகளுக்கு ஒளிபரப்பு செய்யும் வசதியும் இங்குள்ளது. மேலும், இங்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்கள் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தரமான கண்கண்ணாடிகள் விற்பனை செய்யும் பிரிவும் இம் மருத்துவமனையில் செயல்படுகிறது.