ஏஞ்சல் கோப்பை 2019 – கிரிக்கெட் போட்டி

திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “ஏஞ்சல் கோப்பை -2019 ” என்னும் தலைப்பில் 19 வயதினர்க்கான கிரிக்கெட் போட்டி (10 ஓவர் விக்கி பால்) கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கிரிக்கெட் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 35 அணிகள் பதிவு செய்திருந்தன. முதலாவது லீக் சுற்று நாக்அவுட் முறைகள் நடைபெற்றது, இதில் 16 அணிகள் அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று 8 அணிகள் அடுத்து சுற்றுக்கு தேர்வாகின. அடுத்தாக நடைபெற்ற சுற்றுகளில் ராக்கெட் சென்னிமலை, 7:30 கைஸ், பைரி பிஸ்டர்ஸ், பசுவும் பட்டி பாய்ஸ் போன்ற 4 அணிகள் அரையிறுதி வாய்ப்பை பெற்றன. இறுதிச்சுற்றில் ராக்கெட் சென்னிமலை அணிக்கும் பசுவும் பட்டி பாய்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது  இதில் ராக்கெட் சென்னிமலை அணி வெற்றிப்பெற்று ஏஞ்சல் கோப்பையை தட்டிச்சென்றது. போட்டியின் முடிவில் முதல் பரிசுப் பெற்ற ராக்கெட் சென்னிமலை அணி ரூ.5000 ரொக்கம் மற்றும் பரிசுக் கோப்பை மற்றும் பட்டம் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற பசுவம்பட்டி பாய்ஸ் அணி ரூ.3000, மூன்றாம் பரிசுப்பெற்ற 7.30 கயிஸ் அணிக்கு ரூ.1000 வழங்கப்பட்டது.