KPR-ல் யூ ஆர் லவ்ட் நிறுவனத்தின் புரட்சியாளர் விருதுகள்

யூ ஆர் லவ்ட் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முக்கிய நிகழ்வாக புரட்சியாளர் விருதுகள் வருடந்தோறும் கொண்டப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் திறமைமிக்க மாணவர்களையும், திறம்பட பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களை அங்கீகரித்து, கௌரவித்து விருது வழங்கப்படுகிறது. மேலும் குடும்ப சூழ்நிலைகளை தாண்டி இம்மாணவர்களின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உழைக்கும் பெற்றோருக்கும், இதுபோன்ற நோக்குடைய சமூக நலத் தொண்டு நிறுவனங்களை கண்டுபிடித்து விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் இலக்கியம், கலை, விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், சமூக நலம், தலைமைத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாண்டு புரட்சியாளர் விருதுகள் கோவையில் உள்ள (KPR) கல்வி நிறுவனங்களில் ஆகஸ்ட் 31ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற இருக்கின்றது.

இவ்விருது வழங்கும் விழாவின் முக்கிய அம்சமாக மென்டார்- மென் டீ என்கிற வழிநடத்தி ஊக்குவிக்கும் அவர்களின் துறையில் முன்னோடிகளாக விளங்கும் வழிகாட்டிகளோடு இணைத்து, அந்த வருடம் முழுவதும் இம்மாணவர்கள் அவர்களது துறைகளில் முன்னேற ஊக்கப்படுத்துவதோடு, வழி நடத்தவும் படுகிறார்கள். இந்நிகழ்ச்சில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளர்,இயக்குனர், என்.குமார் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் (ஒய்வு), டேனியல் ஜேக்கப் செயல்பாட்டு இயக்குனர், சார்லஸ் காட்வின் மேடை பேச்சாளர், சிவா சுப்ரமணியம் மனிதவள வணிக பங்களிப்பாளர், மற்றும் இக்கல்லூரின் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.