கே.ஐ.டி கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம்

கோவை அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் “International Conference On Science, Technology, Engineering and Management( ICSTEM’2019’ ) என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் ஆர்.சக்திவேல், உதவி இயக்குனர்,AICTE, உயர் கல்வித் துறை, MHRD  புது தில்லி மற்றும் முனைவர் எஸ். மகாதேவன்,Deputy Dean Of school Of Engineering, AMIRTHA VISHWA VIDYAPEETHAM , கோயம்புத்தூர், கல்லூரியின் துணைத்தலைவர் இந்துமுருகேசன், செயல் அறங்காவலர் சூர்யா, இயக்குனர் முனைவர் .பொன்.அன்பழகன், முதல்வர் முனைவர். மோகன்தாஸ்காந்தி , துணை முதல்வர் முனைவர் ரமேஷ், அனைத்துதுறைத் தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ  – மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்

முனைவர் சாந்தி சர்வதேச கருத்தரங்கம் பற்றி விளக்கினார்.

முனைவர் ஆர்.சக்திவேல், உதவி இயக்குனர் , AICTE உயர் கல்வித் துறை, MHRD புது தில்லி ( தலைமைப் பேச்சாளர்)சிறப்புரை  நிகழ்த்தினார். இவர் பேசியது: ஆராய்ச்சி நலன்கள் முழுவதும் தொழில்துறை பயன்பாடுகள் தொடர்பாக இருக்கும் என்பதையும் ,சமூகத்தின் மீது தாக்கம் உள்ள தன்னாட்சி வாகனங்கள்,ஸ்மார்ட் சாலைகள்  மற்றும் ஸ்மார்ட் நகரங்கள், நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள், மேம்பட்ட உதவி அமைப்பு, எந்திரவியல், ஆட்டோமொபைல் மருந்துத்துறை மற்றும் ஸ்மார்ட் தொழில்சாலைகள் பற்றி மாணவ _ மாணவிகளுக்கு விளக்கினார். இந்த கருத்தரங்கின் இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

 

சிறப்பு பேச்சாளர்களாக முனைவர் எஸ் மகாதேவன் , Deputy Dean Of school Of Engineering, AMIRTHA VISHWA VIDYAPEETHAM , கோயம்புத்தூர் பங்கேற்று இந்தியாவில் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்களை  ஊக்குவிக்கவும், தொழில்முனைவோர் புதுமையான தயாரிப்புகளை சிந்திக்கவும் வலியுறுத்தினார். இக்கருத்தரங்கில் சர்வதேச அளவில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 1000 ஆராய்ச்சி கட்டுரைகள் பெறப்பட்டது. இதில் 500 ஆராய்ச்சி கட்டுரைகள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இறுதில் முனைவர்.தீபா அவர்கள் நன்றி கூறினார்.