ஸ்ரீ  ராமகிருஷ்ணா  கல்லூரியில் ஆண்டு விழா

கோவை பச்சாபாளையத்திலுள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ  ராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா அண்மையில் எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் தலைமை வணிக அலுவலர்  சுவாதி ரோஹித் அவர்கள் தலைமையேற்று சிறப்பு செய்தார்.

சிறப்பு விருந்தினராக மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கமருதீன் பின் ஹூசைன் அவர்கள் பங்குகொண்டு தனது சிறப்புரையில் மாணவர்கள் தங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு  உறுதுணையாக இருக்கும் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும், கற்றல் என்பது ஆத்மார்த்தமான அற்ப்பணிப்பு உணர்வுடன் செய்யவேண்டியது! எதிர்கால தொழில் வாய்ப்பிற்காக செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

விழாவின் வாழ்த்துரையை எ. எபிநேசர் ஜெயக்குமார், இயக்குனர் (கல்வித்துறை),                  எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட், கோவை அவர்களும், கல்லூரியின் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர். எம். பால்ராஜ் அவர்களும் வழங்கினார்கள்.

இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக சிறந்த மாணவருக்கான பரிசுகள், வேலுமணி அம்மாள் வெங்கடேசலு நாயுடு. நினைவு தங்ககப்பதக்கம் ,P. சங்கீதா (தகவல் தொழில்நுட்பத் துறை) அவர்களுக்கும், சிறந்த மாணவியருக்கான  சாரதாமணி  பாலகிருஷ்ணன் நாயுடு நினைவு தங்ககப்பதக்கம் M பூர்ணிமா (மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை) அவர்களுக்கும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.