பிறந்த குழந்தைக்கு அரிய வகை இரட்டை சிக்கல்!

  • ஆபரேஷனில் சரி செய்தது ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை

இரண்டு மாதம், இரண்டு கிலோ எடையில், இரட்டை குழந்தையாய், செயற்கைமுறை கருத்தரிப்பில் பிறந்த குழந்தைகளில் ஒன்றுக்கு, பிறந்தது முதல் வாந்தியும், முச்சு திணறலும் இருந்து வந்தது. குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தேவபிரசாத், இருதய துடிப்பு வரைபடமும், சிடி ஸ்கேன் செய்து பார்த்தனர்.  குழந்தைக்கு ரத்த நாளக்குழாய் ஒன்றுக்கு பதிலாக, இரட்டையாக ஒட்டியிருந்தது. இது மிகவும் அரிதான ஒன்று. இருதய குறையுடன் பிறக்கும் குழந்தைகளிலும் இந்த வகைக்கு 0.5 -1% தான் வாய்ப்பு உள்ளது. பல லட்சத்தில் ஒன்று மட்டுமே இவ்வாறு அமைய வாய்ப்பு உள்ளது. குழந்தைக்கு இடது ரத்த நாளம் மட்டுமின்றி, வலது புறத்திலிருந்தும் ஒரு ரத்த நாளம் உருவாகி வட்ட வடிவத்தில் இருந்தது. இது, முச்சு குழலுக்கும், இரப்பை குழலுக்கும் இடையே அழுத்திக் கொண்டிருந்தது. இந்த அழுத்தம் காரணமாக குழந்தைக்கு முச்சு திணறலும், உணவுக்குழாயில் உணவு செல்ல வழியின்றியும் தவித்தது.

குழந்தையின் எடை குறைந்து வந்தது. குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவையாக இருந்தது. எடை குறைவான சிசுவுக்கு இந்த சிக்கலான சிகிச்சை ஒரு சவாலாகவே இருந்தது. அறுவை சிகிச்சையில்லாமல் காப்பது மிகவும் கடினமானதாக இருந்தது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழுவில் குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர்.விஜய் சதாசிவம், டாக்டர்.சுஜித், டாக்டர்.ரீனுாஸ் ஆகியோர் டாக்டர்.தியாகராஜ முர்த்தியுடன் இணைந்து, அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தையின் மார்பை திறந்து, முச்சுக்குழல், மற்றும் இரைப்பை குழாயையும் அழுத்திக் கொண்டிருந்ததை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இந்த சிகிச்சை முழுமையாக நடக்கும் வரை சிறப்பாக அனைத்து அவயங்களும் சரியாக இயங்க மயக்கவியல் நிபுணர் டாக்டர்.நரேந்திர மேனன் மயக்கம் அளித்து உதவினார்.

சிறிய குழந்தையாக இருந்ததால் அறுவை சிகிச்சைக்குப்பின்னும் சிக்கல்கள் நீடிக்கும். இந்த கவனிப்பை சிசுவியில் நிபுணர் டாக்டர்.சித்தார்த்த புத்தவராஜூ மற்றும் டாக்டர்.சுஜா மரியம் ஆகியோர் சரியான முறையில் மேற்கொண்டனர். ஒரு வாரத்தில் குழந்தையுடன் பெற்றோர் நலமுடன் வீடு திரும்பினர். நலமடைந்த குழந்தையின் எடை அதிகரிக்க துவங்கியுள்ளது. சிக்கலான சிகிச்சையையும் எளிதாக்கும் நிபுணர்கள் இந்த மருத்துவமனையின் பக்க பலமாக இருக்கின்றனர். இவர்களை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் நிர்வாக அறக்கட்டளை தலைவர் விஜயக்குமார் பாராட்டினார்.